ஈஷா அம்பானியின் பிரமாண்ட வீடு: மதிப்ப கேட்டா அசந்து போவீங்க..!

ISHA AMBANI: ரிலையன்ஸ் குழுமத்தின் உரிமையாளரும் தலைவரும் ஆன முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி தனது நெடுநாள் நண்பரான ஆனந்த பிராமலை கரம் பிடித்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஈஷா அம்பானியின் பிரமாண்ட வீடு: மதிப்ப கேட்டா அசந்து போவீங்க..!

ஈஷா அம்பானியின் பிரமாண்ட வீடு!


Mumbai: 

Isha Ambani: ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த பிராமலின் பிரமாண்டமான திருமணம் சில தினங்களுக்கு முன் நடந்த நிலையில், புதுமணத் தம்பதியர் இருவரும் இனி வகிக்கப்போகும் வீட்டைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் குழுமத்தின் உரிமையாளரும் தலைவரும் ஆன முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி தனது நெடுநாள் நண்பரான ஆனந்த பிராமலை கரம் பிடித்தார். 

இவர்களின் திருமணம் அம்பானியின் வீடான  400,000 சதுர அடி உள்ள  27 தளங்கள் கொண்ட ஆன்டிலாவில் திருமணம் நடைபெற்றது. அமெரிக்காவில் இருந்து ஹில்லாரி கிளின்டன், ஜான் கெர்ரி , சவுதி அரேபியாவின் பெட்ரோலியத்துறை அமைச்சர் காலித் -அல் ஃவாலிக் மற்றும் பல அரசு மற்றும் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த பாடகி பிரான்சின் தனிப்பட்ட பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

u9gbgprk

 தற்போது திருமணத் தம்பதியினர்  ஆனந்த பிராமலின் பெற்றோர் பரிசு அளித்த 50,000 சதுரடி உள்ள காட்டிலாவில் குடிபெயர உள்ளனர்.

uud7rego

சுமார் 62 மில்லியன் டாலர்களுக்கு ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட இந்த பிரமாண்டமான பங்களா 'குலிடா' என பெயரிடப்பட்டது. திருமணத்திற்கு முன்பிருந்தே வீட்டு பணிகள் தொடங்கிய நிலையில் கண்ணாடிகளால் ஆன பெரிய தூண்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை லண்டனை சேர்ந்த முப்பரிமான வடிவமைப்பு (3D) நிறுவனம் ஆன Eckersley OCallaghan ( இக்கேலர்ஸ்லேய் ஓ கெலேஹான்) செய்து வருகிறது.

மேலும் அந்த பிரமாண்டமான வீட்டில் பல டைனிங் மற்றும் தங்கும்  அறைகளுடன், பிரமாண்டமான நீச்சல் குளமும் ஒன்று உள்ளது.

டிசம்பர் 12  ஈஷாவின் திருமணத்தை தொடர்ந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி - ஷேக்லா மேத்தாவின் திருமணம் நடக்க உள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................