This Article is From Nov 30, 2018

5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக 48 லட்சம் ட்வீட்டுகள்

இந்தியாவில் 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக ட்விட்டுகள் அதிகரித்ததால், இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள வெளி நாட்டினரும் ஆர்வமாக உள்ளனர்

5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக 48 லட்சம் ட்வீட்டுகள்

தேர்தலை முன்னிட்டு சிறப்பு எமோஜிகளை ட்விட்டர் வெளியிட்டுள்ளது.

New Delhi:

நாட்டில் தற்போது சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக கடந்த 2 மாதங்களில் மட்டும் 48 லட்சம் ட்விட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு தளத்தில் இருந்துகொண்டே பெருவாரியான மக்களை தொடர்பு கொள்ள முடியும் என்பதால் மாநில கட்சிகளின் தலைவர்கள் பலர் ட்விட்டரை பயன்படுத்தி வருகின்றனர். வாக்காளர்களும் உடனுக்குடன் அப்டேட்டுகளை தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்தியாவில் 5 மாநில தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்கள் ட்விட்டரில் அதிகரித்துள்ளன. இதனால், இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிவதற்கு வெளிநாட்டினரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரின் அரசு கொள்கையின் இந்திய பிரிவின் தலைவர் மஹிமா கவுல் கூறுகையில், ''ட்விட்டரில் அரசியல் கலந்துரையாடல்கள் அதிகரித்துள்ளன. அனைத்து தரப்பு மற்றும் அனைத்து விதமான கலந்துரையாடல்களை ட்விட்டரில் காண முடியும். இந்தியாவில் நடக்கும் தேர்தல்களின் அதிர்வுகளை ட்விட்டரில் காண முடிகிறது.

48 லட்சம் ட்விட்டுகள் கடந்த 2 மாதங்களில் 5 மாநில தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ளன. இதிலிருந்து மாநில கட்சிகளின் தலைவர்கள் ட்விட்டரை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பது தெளிவாகிறது. ட்விட்டரில் இளைஞர்களும், ஊடகங்களும் தேர்தல்களைப் பற்றி அதிகம் பேசுகின்றனர்'' என்றார்.

5 மாநில தேர்தலை முன்னிட்டு சிறப்பு எமோஜிகளை ட்விட்டர் வெளியிட்டிருக்கிறது. #AssemblyElections2018 என்ற ஹேஷ்டேக்கில் வரும் இந்த எமோஜி வரும் டிசம்பர் 23-ம்தேதிவரை ஆக்டிவேட்டில் இருக்கும்.

.