This Article is From Feb 17, 2020

'கொரோனா தொற்று இல்லை' - டெல்லியில் இருந்து கேரளா திரும்பும் 115 பேர்

நடத்தப்பட்ட சிகிச்சையில் அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்றும், அவர் திங்கள் அன்று மாலை (இன்று) கேரளா அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'கொரோனா தொற்று இல்லை' - டெல்லியில் இருந்து கேரளா திரும்பும் 115 பேர்

இருப்பினும் வீடு திரும்பும் அனைவரும் வீட்டில் தனிமையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • அனைவரும் வீட்டில் தனிமையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
  • 'கொரோனா தொற்று இல்லை'
  • டெல்லியில் இருந்து கேரளா திரும்பும் 115 பேர்
Thiruvananthapuram:

கேரளாவிலிருந்து தேசிய 'வைராலஜி' நிறுவனத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான கொரோனா வைரஸ் வழக்குகளின் 418 மாதிரிகளில், 405 மாதிரிகளுக்கு நோய் தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன. மேலும் மீதமுள்ள மாதிரிகளுக்கான முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரள அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் அறிவிப்பின்படி, அங்கு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூவரில் ஏற்கனவே இருவர் நலம் பெற்று வீடு திரும்பிவிட்டதாகவும். மேலும் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு எடுக்கப்பட்ட சோதனைகளின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை மொத்தம் 2,276 பேர் கொரோனா பயத்தால் கேரளாவில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் 2,262 பேர் வீடுகளிலேயே தனிமை படுத்தப்பட்டுள்ளதாகும் மீதமுள்ள 14 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பதாகவும் கேரள அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது. அவ்வாறு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நபர்களின் உடல்நிலை சரியான நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில நாட்களுக்கு முன்பு சீனாவில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்ட இந்தியர்களில்  கேரளாவைச் சேர்ந்த 115 பேர், டெல்லியில் உள்ள இரண்டு முகாம்களில் தற்போது  தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கேரள அரசுக்கு தெரிவித்துள்ளது. மேலும் இந்த 115 பேருக்கு நடத்தப்பட்ட சிகிச்சையில் அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்றும், அவர் திங்கள் அன்று மாலை (இன்று) கேரளா அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் வீடு திரும்பும் அனைவரும் வீட்டில் தனிமையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

.