ஐதராபாத்தில் நாய்குட்டிகளை உயிருடன் எரித்த கொடூரம்

விலங்கு நல ஆர்வலர்கள் இந்த செயலை கண்டித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஐதராபாத்தில் நாய்குட்டிகளை உயிருடன் எரித்த கொடூரம்

உயிருக்கு போராடிய நிலையில் நான்காவது குட்டியும் இறந்து போனது.


Hyderabad: 

ஹைலைட்ஸ்

  1. குட்டிகள் எரிவது கண்டு பரிதவித்த தாய்.
  2. சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த சம்பவத்தின் புகைப்படம் மற்றும் வீடியோ
  3. விலங்கு நல ஆர்வலர்கள் இந்த செயலை கண்டித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஐதராபாத்தில் சனிக்கிழமையன்று உயிருடன் நான்கு நாய்க்குட்டிகள் எரிக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது.

இத்தகைய மனிதநேயமே இல்லாத இச்சம்பவத்தை யார் செய்தது என இதுவரை தெரியவில்லை. அவ்விடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகளை வைத்து இந்த செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்ய போலீஸார் முடிவெடுத்துள்ளனர்.

தீயில் இறந்துபோன நாய்குட்டிகளின் தாய் இந்த சம்பவத்தை கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அதன் குட்டிகளை காக்க பரிதவித்தது. பின்னர் இறந்த குட்டிகளின் உடல்கள் அருகே சென்று கண்ணீர் மல்க அருகே நின்றது.

மேலும் இச்சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அந்த இடத்தில் வசிக்கும் மக்கள், விலங்குகள் நல ஆர்வலர்களை அழைத்து இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். இதை தெரிந்து அங்கு வந்த விலங்கு நல ஆர்வலர் மூன்று குட்டிகள் ஏற்கனவே இறந்து விட்டதாகும் ஒன்றை காப்பாற்ற முடியும் என அக்குட்டியை விலங்குநல மருத்துவரிடம் கெண்டு சென்றார். ஆனால் உயிருக்கு போராடிய நிலையில் அக்குட்டியும் இறந்தது.

இதைத் தொடர்ந்து “பீப்பிள் ஃபார் அனிமல்ஸ்” என்ற விலங்கு நல ஆர்வலர்கள் விலங்குகளை துன்புறுவத்துவதற்க்கு ஏதிராக இந்திய தண்டனை தொகுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.


சமீபகாலமாக இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிவரும் நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் இதைபோல் உயிருடன் இரண்டு நாய்கள் எரிக்கப்பட்டன.

மேலும் 2016-ல் நாய்களை ஒரு பார்ட்டியின் போது எரித்து கொல்லப்பட்டதையடுத்து அதற்கு காரணமான டீனேஜ் சிறுவர்கள் கைது செய்யபட்டனர் .

இதைப்போல் சென்னையில் கடந்த ஆண்டு நாயின் கழுத்தை நெரித்து கொன்றதும், அதே ஆண்டில் மருத்துவ மாணவர்கள் இருவர் சேர்ந்து நாயை உயிருடன் மேலிருந்து கீழே தள்ளி கொன்றனர். இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................