பெங்களூரு அருகில் காரின் டயர் வெடித்து விபத்து: மூவர் பலி!

பெங்களுரூ - மங்களுரூ சாலையில் எஸ்.யூ.வி வகை கார் ஒன்றின் டயர் வெடித்துச் சிதறியதில் அந்தக் காரில் பயணித்த மூன்று இளைஞர்கள் பலியாகி உள்ளனர்

 Share
EMAIL
PRINT
COMMENTS
பெங்களூரு அருகில் காரின் டயர் வெடித்து விபத்து: மூவர் பலி!
Bengaluru: 

பெங்களுரூ - மங்களுரூ சாலையில் எஸ்.யூ.வி வகை கார் ஒன்றின் டயர் வெடித்துச் சிதறியதில் அந்தக் காரில் பயணித்த மூன்று இளைஞர்கள் பலியாகி உள்ளனர். மேலும் உடன் பயணித்த பத்து பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

ராம்நகரா மாவட்டத்தில் மகடி தாலுகா அருகில் திகலரபாலயா பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. எஸ்.யூ.வி காரின் டயர் வெடித்துச் சிதறியதில் ஓட்டுநர் வாகனக் கட்டுப்பாடை இழந்துள்ளார். இதனால் விபத்துக்கு ஏற்பட்டுள்ளது.

வண்டியில் பயணித்த 13 பேரும் மந்த்யா பகுதியில் இருந்து நாகமங்களா சென்று கொண்டிருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20-களில் உள்ள ஹரிஷ் ராவ், உஜ்வால், மற்றும் ரக்‌ஷன் ஆகியோர் விபத்தில் பலியாகி உள்ளனர். மற்றவர்கள் காயமடைந்துள்ளனர்.

சாலையில் கடந்து சென்றோர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸார் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்துள்ளனர். மூன்று இளைஞர்களும் மருத்துவமனைக்கு கொண்டு வந்த போதே மரணமடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................