This Article is From Sep 11, 2018

1998 கோவை குண்டுவெடிப்பு: 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர் கைது!

1998 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கருதி தேடப்பட்டு வந்த நபரை போலீஸார் 20 ஆண்டுகள் கழித்து கைது செய்துள்ளனர்

1998 கோவை குண்டுவெடிப்பு: 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர் கைது!

கோயம்புத்தூரில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கருதி தேடப்பட்டு வந்த நபரை போலீஸார் 20 ஆண்டுகள் கழித்து கைது செய்துள்ளனர்.

என்.பி.நூஹு என்கிற மங்காவு ரஷீத் என்பவரை கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தமிழக சிறப்புப் புலனாய்வுப் படை கைது செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷீத் கைது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘உளவுத் துறையால் தெரிவிக்கப்பட்ட தகவல் மூலம் ரஷீத் கைது செய்யப்பட்டார். 20 ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்துள்ளார். ரஷீத்தை குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1998, பிப்ரவரி 14-ல், பாஜக-வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, கோயம்புத்தூருக்கு வருவதாக இருந்தது. அவரது வருகையையொட்டி அன்று கோவையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 58 பேர் இறந்தனர். 200 பேருக்கு மேல் காயமடைந்தனர். அன்று அத்வானி உரை நிகழ்த்த திட்டமிடப்பட்டிருந்த இடத்திலும் குண்டு வெடித்தது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.