This Article is From Feb 18, 2019

அரசு ஊழியர்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியிலேயே சேர்க்க ஏன் விதிகள் வகுக்கக்கூடாது? உயர்நீதிமன்றம்

அரசு ஊழியர்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியிலேயே சேர்க்க ஏன் விதிகள் வகுக்கக்கூடாது? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

அரசு ஊழியர்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியிலேயே சேர்க்க ஏன் விதிகள் வகுக்கக்கூடாது? உயர்நீதிமன்றம்

ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கு விசாரணையின் போது அரசின் ஒவ்வொரு ரூபாய் வருமானத்திலும் 71 பைசா அரசு ஊழியர் ஊதியம், ஓய்வூதியம், வட்டிக்காக செலவிடப்படுவதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஒவ்வொரு ஊதியக்குழு பரிந்துரையின் போதும் அரசு ஊழியர், மற்றவர் இடையே இடைவெளி அதிகரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அரசு ஊழியர்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியிலேயே சேர்க்க வேண்டுமென்ற விதியை ஏன் கொண்டுவரக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ பொறியியல் கல்லூரி படிப்பில் முன்னுரிமை தரலாமா? என்றும் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். உரிமைக்காக போராடும் அரசு ஊழியர்கள் தங்களது கடமையிலும் கவனத்தை செலுத்த வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய பிடித்தத்திற்கு பதில் விடுமுறைக் காலத்தை கழித்துக்கொள்ளலாமே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

.