எம்.பிக்கள் பதவியேற்பு விழா: காங்., சகாக்களை நேருக்கு நேர் சந்தித்த ஜோதிராதித்ய சிந்தியா!

கடந்த 19 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த ஜோதிராதித்ய மார்ச் மாதத்தில் பாஜகவில் இணைந்தார்.

எம்.பிக்கள் பதவியேற்பு விழா: காங்., சகாக்களை நேருக்கு நேர் சந்தித்த ஜோதிராதித்ய சிந்தியா!

எம்.பிக்கள் பதவியேற்பு விழா: காங்., சகாக்களை நேருக்கு நேர் சந்தித்த ஜோதிராதித்ய சிந்தியா!

New Delhi:

பாஜக மாநிலங்களவை உறுப்பினராக ஜோதிராதித்ய சிந்தியா நாடாளுமன்றத்தில் இன்று பதவியேற்ற போது, திக்விஜய சிங் உள்ளிட்ட முன்னாள் காங்கிரஸ் சகாக்களை நேருக்கு நேர் சந்தித்துள்ளார். அப்போது, இருவரும் கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்காத நிலையில், மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜோதிராதித்தய சிந்தியா உள்ளிட்ட 61 உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். அப்போது, பதவியேற்புக்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங், குலாம்நபி அசாத் மற்றும் மல்லிகார்ஜூன  கார்கே உள்ளிட்டோரை நேருக்கு நேர் சந்தித்த ஜோதிராதித்ய அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். 

கடந்த 19 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த ஜோதிராதித்ய மார்ச் மாதத்தில் பாஜகவில் இணைந்தார். இதில், அவருடன் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரையும் அழைத்துச்சென்றார். இதனால், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை இழந்தது, பாஜக ஆட்சியை கைப்பற்றியது. 

பாஜகவில் இணைவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பே, ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் மற்றும் அப்போதைய முதல்வர் கமல்நாத் உள்ளிட்டோருடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாமல் அமைதி காத்து வந்துள்ளார். 

இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு பின்பு முதன்முறையாக இன்றைய சந்திப்பின் போது, தனது காங்கிரஸ் சகாக்களுடன் பேசியுள்ளார். அதுவும் ராஜஸ்தானில் சச்சின் பைலட் இதேபோல் காங்கிரஸ் ஆட்சிக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி வரும் நிலையில் இது நிகழ்ந்துள்ளது. 

Newsbeep

ஜோதிராதித்ய சிந்தியா போல சச்சின் பைலட்டுன் ராகுல் காந்தியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர் ஆவார். பைலட் மீது இந்த மாத தொடக்கத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஆட்சியை கலைக்க பாஜகவுடன் பேரம் பேச முயற்சித்ததாக குற்றம்சாட்டியுள்ளார். 

முன்னதாக, இந்த ஞாயிற்றுக்கிழமையன்று, திக்விஜய சிங் கூறும்போது, சச்சின் பைலட் ஜோதிராதித்ய சிந்தியாவை பின்பற்றி பாஜகவுக்கு செல்லக்கூடாது. அவருக்கு காங்கிரஸ் பெரிய எதிர்காலம் உள்ளது என்று கூறியிருந்தார். 

தொடர்ந்து, பைலட்டை அவர் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால் அவரது அழைப்புகள் மட்டும் குறுஞ்செய்திகளுக்கு எந்த பதிலும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.