This Article is From Jul 05, 2018

கொள்ளையர்களுடன் சண்டை போடும் நகைக் கடை உரிமையாளர்: சி.சி.டி.வி காட்சி

கொள்ளையர்கள் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் ரூ. 4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றுடன் தப்பிச் சென்றுவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்

கொள்ளையர்களுடன் சண்டை போடும் நகைக் கடை உரிமையாளர்: சி.சி.டி.வி காட்சி
Hyderabad:

ஐதராபாத் பீராமகுடா பகுதியில் உள்ள நகைக் கடையில் கடந்த புதனன்று நகை திருட வந்த இரு கொள்ளையர்களுடன் நகைக்கடை உரிமையாளர் சண்டையிடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஜெய் பவானி நகைக்கடையின் உரிமையாளர் ஜெயராம் (32), கிட்டத்தட்ட அந்த கொள்ளையர்களை தடுத்துவிட்டாலும், அவரின் கண்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

அந்த இருவரும், இரவு ஒன்பது மணியளிவில் வாடிக்கையாளர்கள் போல் கடைக்குள் சென்றிருக்கின்றனர். அவர்களுக்கு ஜெயராமன் 45 நிமிடங்களுக்கும் மேலாக பல நகைகளை காண்பித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். பின்னர் மேலும் சில நகைகளை எடுக்க பாதுகாப்பு அறைக்குள் சென்றவரை அந்த இருவரும் பின்தொடர்ந்து சென்றிருக்கின்றனர்.
 

 

அந்த அறையில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சியில், ஒரு முகமூடி அணிந்த நபர் ஜெயராமனை துப்பாக்கியை கொண்டு மிரட்டியுள்ளார். பர்தா அணிந்திருந்த பெண்மணி ஒருவர் ஜெயராமனை குச்சியால் அடிப்பதையும் பார்க்க முடிகிறது. பத்து நிமிடத்திற்கும் மேல் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட ஜெயராமன் அவர்களை தடுக்க முயன்றும் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். சிறிது நேரம் கழித்து ஜெயராமன் வலிகளுடன் முகத்தினில் கைவைத்தபடி துடித்துக் கொண்டிருந்தார்.

அந்த கொள்ளையர்கள் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள ரொக்கம் ஆகியவற்றுடன் தப்பிச் சென்றுவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். திருடப் பயன்ப்படுத்தியாக வீடியோவில் தெரியும் துப்பாக்கியை அவன் பயன்படுத்தவேயில்லை என்பதால் அது பொம்மை துப்பாக்கியாக இருக்கலாம் என்றும், திருடர்கள் முகத்தை மறைத்திருந்ததால் அவர்கள் யாரென்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

அந்த வீடியோ காட்சிகள் ஆராயப்பட்டு வருகிறது, அதன் பிரதிகள் மற்ற காவல் நிலையங்களும் அனுப்பப்பட்டுள்ளது.

அதன் உரிமையாளர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தப்பியோடிய திருடர்களில் ஒருவருக்கு மூக்கில் அடிபட்டிருப்பது சிசிடிவி காட்சியில் பதிவாகியிருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

.