ஒரு கொலையை மறைக்க 9 கொலைகள்! தெலுங்கானா தொழிலாளர்கள் மரணத்தில் திடுக் திருப்பம்!

Warangal Murder Case: கிணற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பீகாரைச் சேர்ந்த இருவர், திரிபுரைவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் 3 பேர் என 9 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஒரு கொலையை மறைக்க 9 கொலைகள்! தெலுங்கானா தொழிலாளர்கள் மரணத்தில் திடுக் திருப்பம்!

ஒரு கொலையை மறைக்க 9 கொலைகள்! தெலுங்கானா தொழிலாளர்கள் மரணத்தில் திடுக் திருப்பம்!

Warangal:

கடந்த வாரம் தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் ஒன்பது பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 24 வயது இளைஞர் ஒருவரை நேற்றைய தினம் போலீசார் கைது செய்துள்ளனர். 

மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தின் கிணற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவர்கள் அனைவரும் தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்பது தெரியாமல் இருந்தது வந்த நிலையில், மார்ச் மாதம் செய்த ஒரு கொலையை மறைக்க 9 பேரையும் சஞ்சய் குமார் என்ற அந்த இளைஞர் கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து அவர்களை மயக்கமடைய செய்து பின்னர் 9 பேரையும் கிணற்றில் தூக்கி வீசி சஞ்சய் குமார் கொலை செய்துள்ளார். 

இதுதொடர்பாக வாரங்கல் நகர காவல் ஆணையர் ரவீந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கீசுகொண்டா மண்டல் கிராமத்தில் நடந்த இந்தக் கொலைகள் அனைத்தும் அவர்களது குடும்பத்துடன் தொடர்புடைய ஒரு பெண்ணின் கொலையை மறைப்பதற்காக குற்றம்சாட்டப்பட்ட அந்த இளைஞர் மேற்கொண்டுள்ளார். 

ஒரு கொலையை மறைக்க, ஒன்பது கொலைகளை அவர் மேற்கொண்டுள்ளார். அந்த நபருக்கு காவல்துறை அதிகபட்ச தண்டனையை பெற்று தரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் மக்சூத் (48), இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கு வங்கத்திலிருந்து குடிபெயர்ந்து வாரங்கல் கிராமத்தில் குடியேறினார். அவரது குடும்பத்தினரும் அவரது வீட்டிற்கு அடுத்தடுத்த இரண்டு அறைகளில் தங்கியிருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மக்சூத் அவரது மனைவி, 3 மகன்கள், ஒரு மகள் என 6 பேர் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களது வீட்டிற்கு அடுத்தடுத்து வீட்டில் அவர்களது உறவினர்களும் தங்கி வந்துளனர். இவர்கள் அனைவரும் வாரங்கலில் உள்ள சணல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். 

இந்நிலையில், பிஹாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் யாதவ் (24), என்பவர் கடந்த மார்ச்.6ம் தேதி மக்சூத்தின் உறவுக்கார பெண் ஒருவரை கொலை செய்து, அவரை காணவில்லை என நீண்ட நாட்களாக மறைத்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, மக்சூத் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, உண்மை வெளியில் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் சஞ்சய் மக்சூத்தின் குடும்பத்தினர் 6 பேர், அவரது பக்கத்து வீட்டில் இருந்த பீகார், திரிபுராவைச் சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் என 9 பேரையும் உணவில் தூக்க மாத்திரை கலந்து மயக்கமடைய செய்து கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்துள்ளார். 

இதனிடையே, கிணற்றில் இருந்து 9 பேரின் சடலங்களும் கைப்பற்ற நிலையில், அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என போலீசார் விசாரித்து வந்தனர். இதனிடையே, அவர்களது உடலில் லேசான காயங்கள் இருந்தததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க 6 சிறப்பு போலீஸ் குழுவினர் நியமிக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. 

இதைத்தொடர்ந்து, இந்த கொலைகளின் பின்னணியில் சஞ்சய் என்ற இளைஞர் இருந்தது தெரியவந்துள்ளது.