This Article is From Jun 25, 2020

வெறும் கைகளால் மெகா சைஸ் சுறாவின் வாயைப் பிளந்த நபர் - படுவைரலாகும் வீடியோ!

‘இது ரொம்ப கிரேஸி…’

வெறும் கைகளால் மெகா சைஸ் சுறாவின் வாயைப் பிளந்த நபர் - படுவைரலாகும் வீடியோ!

‘அந்த நபர் தன் கைகளை வைத்தே சுறாவைப் பிடித்துள்ளார். இது கிரேஸியின் உச்சம்,’ 

அமெரிக்காவின் டெலவேர் என்னும் இடத்தில் உள்ள கடற்கரையில், மெகா சைஸ் சுறா மீன் ஒன்றை தன் வெறும் கைகளால் பிடித்துள்ளார் ஒரு நபர். பிடித்தது மட்டுமல்லாமல் அதன் வாயைப் பிளந்து போட்டோகளுக்குப் போஸ் கொடுத்துள்ளார். அவரின் இந்த செயல் சரியா தவறா என்று நெட்டிசன்கள் ஒரு பக்கம் விவாதித்துக் கொண்டிருக்க, இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

டெலவேர் பகுதியைச் சேர்ந்த ரேச்சல் ஃபாஸ்டர் என்பவர், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். பலரும் வீடியோவுக்குக் கீழ், சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் நடவடிக்கை தவறானது என்று கண்டித்தனர். ஆனால் சிலரோ, ‘டெலவேர் பகுதியில் ஒரு சுறாவைப் பிடித்து அப்படியே விடுவதில் எந்தக் குற்றமும் இல்லை' என்று வக்காலத்து வாங்கியுள்ளனர். 

சில நொடிகளே ஓடும் வீடியோவின்போது, பலர் சுறாவின் அளவைப் பார்த்து அதிர்ச்சியில் கூச்சலிடுவது கேட்கிறது. ஒரு பெண், ‘அப்பாடி… எவ்ளோ பெரிய சுறா மீனு…' என்று கத்துவதை தெளிவாக கேட்க முடிகிறது. 

தன் ஃபேஸ்புக் போஸ்ட் குறித்து ஃபாஸ்டர், ‘இந்த வீடியோவில் அந்த நபர், சுறா மீனை தொந்தரவு செய்திருக்கவே கூடாது என்று சொல்பவர்களுக்கு ஒன்றைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கு விபரம் போதவில்லை. டெலவேர் பகுதியில் இப்படிச் செய்வதில் எந்த தவறும் இல்லை,' என்று ஆச்சரியத்தில் சொல்வது கேட்கிறது. 

பல்லாயிரம் பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோ பற்றி சிலர், 

‘இது ரொம்ப கிரேஸி…'

‘அந்த நபர் தன் கைகளை வைத்தே சுறாவைப் பிடித்துள்ளார். இது கிரேஸியின் உச்சம்,' 

எனக் கருத்துகள் பதிவிட்டுள்ளனர். 

ஃபாக்ஸ் நியூஸ் அளிக்கும் தகவல்படி, டெவேர் கடற்பகுதி மற்றும் அட்லான்டிக் பெருங்கடல் பகுதிகளில் இதைப் போன்று பல இடங்களில் சுறா மீன்கள் தென்படும் என்று தெரிவிக்கிறது. டெலவேர் சட்டப்படி, சுறா மீன்களை தங்கள் பிடியில் மக்கள் வைத்திருப்பது சட்ட விரோதம் எனப்படுகிறது. 
 

Click for more trending news


.