This Article is From Sep 24, 2019

By-Election: விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் பெயர் அறிவிப்பு!

By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

By-Election: விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் பெயர் அறிவிப்பு!

By-Election: இதற்காக மு.க.ஸ்டாலின் தலைமையில் 12 பேரிடம் நேர்காணல் நடைபெற்றது

By-Election: விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் அக்.21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக நா.புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். 

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாங்குநேரி தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது என்றும், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுவது என்றும் திமுக கூட்டணியில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி திமுக தலைமை அலுவலகமான  அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு பெறப்பட்டது.

இதனிடையே, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், எம்.பி.யுமான கவுதம் சிகாமணி நேற்று விருப்ப மனு தாக்கல் செய்து பெரும் சர்ச்சையை எற்படுத்தினார். 

இது குறித்து கவுதம சிகாமணி கூறும்போது, “விக்கிரவாண்டி தொகுதியில் 100 சதவிகிதம் வெற்றி எங்களுக்குத்தான். உதயநிதி அங்கு நின்றால், அது ஒரு ஸ்டார் தொகுதியாக மாறும். தமிழக அளவில் அந்தத் தொகுதி கவனம் பெறும்” என்று கூறியிருந்தார். இதனால், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

தொடர்ந்து, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளர் புகழேந்தி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் ராஜாராமன், விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெய ரவிதுரை, முகையூர் முன்னாள் எம்.எல்.ஏ., ஏ.ஜி.சம்பத் உள்பட 22 பேர் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தனர்.

இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல்  மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. விருப்ப மனு தாக்கல் செய்த புகழேந்தி, ரவி துறை உள்பட 12 பேரிடம்  நேர்காணல் நடைபெற்றது.. சம்மந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பிக்கள் திமுக நேர்காணலில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக நா.புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். 66 வயதாகும் புகழேந்தி, திமுகவின் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளராக உள்ளார். 3 முறை விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.


 

.