This Article is From Apr 29, 2019

VITEEE முடிவுகள் வெளியானது; மே 9 முதல் கவுன்சிலிங்!

வேலூர் தொழில்நுட்பக் கழகமான விஐடி (VIT), VITEEE 2019 முடிவுகளை வெளியிட்டுள்ளது

VITEEE முடிவுகள் வெளியானது; மே 9 முதல் கவுன்சிலிங்!

VITEEE 2019 தேர்வு, ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி நடந்தது

New Delhi:

வேலூர் தொழில்நுட்பக் கழகமான விஐடி (VIT), VITEEE 2019 முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில், ‘VITEEE 2019 கவுன்சிலிங் மே 9, 2019 முதல் ஆரம்பிக்கும். கவுன்சிலிங் அட்டவணை, கவுன்சிலிங் முறை, பணம் கட்டும் முறை உள்ளிட்டவை குறித்து சீக்கிரமே தெரிவிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. VITEEE 2019 தேர்வு, ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி நடந்தது. VITEEE தேர்வு முடிவுகள், அந்த பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கிடைக்கும். 

VITEEE 2019 முடிவுகள் மூலம் விஐடி வேலூர் வளாகம், சென்னை வளாகம், விஐடி-போபால், விஐடி-ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் படிப்புகளைத் தேர்வு செய்ய முடியும். 

VITEEE 2019 முடிவுகள்: எப்படி தெரிந்து கொள்வது?

ஸ்டெப் 1: விஐடி பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்துக்குச் செல்லவும். vit.ac.in

ஸ்டெப் 2: VITEEE 2019 என்று கொடுக்கப்பட்டிருக்கும் டேப்-ஐ சொடுக்கவும்

ஸ்டெப் 3: உள்ளே சென்றால் வரும் "VITEEE-RESULTS & EQUATING METHODOLOGY" என்பதை க்ளிக் செய்யவும்

ஸ்டெப் 4: தொடர்ந்து வரும் பக்கத்தில் பதிவு எண்ணை உள்ளிட்டு சொடுக்கவும்

ஸ்டெப் 5: பிற விவரங்களை சமர்பித்து முடிவுகளை தெரிந்து கொள்ளுங்கள்



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.