This Article is From Aug 08, 2019

முத்தலாக்கின் கீழ் வழக்கு பதிவு செய்த பெண்ணின் மூக்கைத் துண்டித்த மைத்துனர்

இந்நிலையில் வழக்கு பதிவு செய்த பெண்ணின் மாமியார் வழக்கை திரும்ப பெறுமாறு கோரியுள்ளார். பெண் மறுக்கவும் மாமியார் அடித்து மிரட்டியுள்ளார். பெண்ணின் மைத்துனர் கூர்மையான ஆயுத்தத்தால் மூக்கை வெட்டினார் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அந்த பெண்ணை கற்களால் தாக்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

முத்தலாக்கின் கீழ் வழக்கு பதிவு செய்த பெண்ணின் மூக்கைத் துண்டித்த மைத்துனர்

பெண்ணின் மைத்துனர் கூர்மையான ஆயுத்தத்தால் மூக்கை வெட்டினார் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அந்த பெண்ணை கற்களால் தாக்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

Sitapur:

உத்தர பிரதேசம் சீதாபூரில், முத்தலாக் கொடுத்த கணவருக்கு எதிராக வழக்கு கொடுத்த பெண்ணின் மூக்கை மைத்துனர் வெட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முஸ்லீம் ஆண்கள் மூன்று முறை ‘தலாக்' என்று உச்சரிப்பதன் மூலம் உடனடி விவாகரத்து செய்வதற்கான பழமையான நடைமுறைக்கு புதிய சட்டத்தின் கீழ் 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறிய தகவலில் “நபர் ஒருவர் தொலைபேசியில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்ததாக எங்களுக்கு ஒரு புகார் வந்தது. இரு குடும்பங்களும் வரவழைக்கப்பட்டு பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டது.  விவகாரம் தீர்க்கப்படாததால் முத்தலாக் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததாக” கூறினார். 

இந்நிலையில் வழக்கு பதிவு செய்த பெண்ணின் மாமியார் வழக்கை திரும்ப பெறுமாறு கோரியுள்ளார். பெண் மறுக்கவும் மாமியார் அடித்து மிரட்டியுள்ளார். 

பெண்ணின் மைத்துனர் கூர்மையான ஆயுத்தத்தால் மூக்கை வெட்டினார் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அந்த பெண்ணை கற்களால் தாக்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

.