முத்தலாக் தடைச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் அமைப்பு மனு

முத்தலாக் தடைச் சட்டத்தை நாடாளுமன்றம் கடந்த ஜூலை 30-ஆம் தேதி நிறைவேற்றியது.

முத்தலாக் தடைச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் அமைப்பு மனு

இந்த சட்டம் அரசியல் சாசனம் 14,15,20 மற்றும் 21 பிரிவுகளின்படி செல்லாது

New Delhi:

முத்தலாக் தடைச் சட்டத்தை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு கணவர் தன் மனைவியிடம் அடுத்தடுத்து தலாக் என்று மூன்று முறை கூறி, அவரை விவாகரத்து செய்வது செல்லாது என்று முஸ்லிம் பெண்கள் (பாதுகாப்பு, திருமண உரிமைச் சட்டம்) 2019 கூறுகிறது. முத்தலாக் தடைச் சட்டத்தின்படி முத்தலாக் கூறி தன் மனைவியை விவாகரத்து செய்யும் முஸ்லிம் கணவருக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும்.

இந்நிலையில் இந்த சட்டம் அரசியல் சாசனம் 14,15,20 மற்றும் 21 பிரிவுகளின்படி செல்லாது மேலும் முஸ்லிம் தனிப்பட்ட சட்டத்தில் தேவையற்ற/ தவறான தலையீட்டை முத்தலாக் தடைச் சட்டம் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை தனிநபர் சட்ட வாரிய நிர்வாகிகளும் கமால் ஃபரூக்கி என்பவரும் தாக்கல் செய்துள்ளனர்.

இந்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள குற்றவியல் அம்சமானது சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை மற்றும் தனிச் சுதந்திரம் மீது எதிர்மறை விளைவுகளைக் கொண்டுள்ளன. உடனடியாக மூன்று முறை தலாக் கூறுவது அரசியல்சாசனப்படி  செல்லாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்பளித்துள்ள நிலையில் இந்த தண்டனைகள் எந்த விளைவும் ஏற்படப் போவதில்லை. முத்தலாக் கூறினாலும் ஒரு திருமணம் நீடிக்கத்தான் போகிறது. தலாக் நடைமுறை செல்லாது என்று மீண்டும் இச்சட்டத்தின் மூலம் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவே முத்தலாக் சட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்தலாக் நடைமுறை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. முத்தலாக் தடைச் சட்டத்தை நாடாளுமன்றம் கடந்த ஜூலை 30-ஆம் தேதி நிறைவேற்றியது.

இச்சட்டம் செல்லாது என்று அறிவிக்ககோரி ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
 

More News