“ஏன் சமைச்சு ஊட்டிவிடலாமே..!”- ரஜினி பற்றிப் பேசிய இயக்குநரைச் சாடிய எஸ்.வி.சேகர்!!

கொரோனா வைரஸ் காரணமாகத் தமிழ்த் திரைப்படத் துறையின் ஃபெப்ஸி ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதால்...

“ஏன் சமைச்சு ஊட்டிவிடலாமே..!”- ரஜினி பற்றிப் பேசிய இயக்குநரைச் சாடிய எஸ்.வி.சேகர்!!

ஃபெப்ஸி ஊழியர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த், 50 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். 

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் இதுவரை 18 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  • கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஒருவர் பலி
  • இந்திய அளவில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்

கொரோனாவை எதிர்கொள்ள இந்திய அளவில் இன்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாகத் தமிழ்த் திரைப்படத் துறையின் ஃபெப்ஸி ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பல முன்னணி நடிகர்களும் நிதி உதவி அளித்து வருகிறார்கள். அதில் ஒரு பகுதியாக சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், 50 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். 

இது குறித்து இயக்குநர் கௌதமன், “ரஜினி, 50 லட்ச ரூபாய் கொடுத்ததற்குப் பதிலாக, மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுத்திருக்கலாம்” எனப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. 

இதை மேற்கோள்காட்டி எஸ்.வி.சேகர், “ரஜினி 50 லட்சம் கொடுத்ததற்குப் பதிலாக மளிகை பொருட்கள் கொடுத்து இருக்கலாம்" - முன்னாள் இயக்குநர் கெளதமன் ஆதங்கம்.

ஏன் சமைச்சு ஊட்டி விடலாமே. ரஜினியை பத்தி பேசியே பிரபமாயிடலாங்கிற உங்க லட்சியம் கடைசிவரை நிறைவேராது,” என்று ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு, கௌதமனை விமர்சனம் செய்துள்ளார்.