This Article is From Jun 19, 2020

மாநிலங்களவையில் காலியாக உள்ள 10 மாநிலங்களை சேர்ந்த இடங்களுக்கு இன்று தேர்தல்!

Rajya Sabha election: மொத்தமுள்ள 245 மாநிலங்களவை இடங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி 91 இடங்களிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி 61 இடங்களும் உள்ளன. இதைத்தொடர்ந்து, மற்ற எதிர்க்கட்சிகள் மற்றும் அணி கூட்டணியில்லாத கட்சிகளிடம் ஒருசேர 68 இடங்கள் உள்ளன

Rajya Sabha election: மாநிலங்களவையில் காலியாக உள்ள 10 மாநிலங்களை சேர்ந்த இடங்களுக்கு இன்று தேர்தல்!

New Delhi:

மாநிலங்களவையில் காலியாக உள்ள 24 இடங்களுக்கு இன்று தேர்தல் நடந்து வருகிறது. இதில், அனைத்து கட்சி தலைவர்களும் வாக்களித்து வருகின்றனர். 

10 மாநிலங்களைச் சேர்ந்த இடங்களுக்கான தேர்தல் காரணமாக கடந்த சில நாட்களாக எம்எல்ஏக்கள் ராஜினாமா, சொகுசு விடுதி அரசியல், கட்சித் தாவல், குதிரை பேரம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் குளறுபடிகள் நடந்து வருகிறது. 

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், பாஜக தங்களது எம்.எல்.ஏ.க்களை வாங்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் இதற்காக தங்களது எம்எல்ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைத்தது. ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் அகமது படேலின் இடத்தை பறிப்பதற்கு முயற்சி செய்த பாஜக அந்த வாய்ப்பை தவறவிட்டது. 

பாஜகவுக்கு மாநிலங்களவையில் மசோதாக்களை இடையூறு இல்லாமல் நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை முக்கியமானதாக உள்ளது. தொடர்ந்து, மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெறுவதற்கு இன்னும் 30 இடங்கள் தேவைப்படுகிறது. 

ஆந்திரா மற்றும் குஜராத்திலிருந்து தலா 4 இடங்களும், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து தலா மூன்று இடங்களும், ஜார்க்கண்டிலிருந்து இரண்டு இடங்களும், மிசோரம், மேகாலயா மற்றும் மணிப்பூரிலிருந்து தலா ஒரு இடத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் தொடங்கி இந்த தேர்தல் நடந்து வருகிறது. இதில், குஜராத்தில் ஒரு இடத்திற்கும், ராஜஸ்தானில் ஒரு இடத்திற்கும், மத்திய பிரதேசத்தில் ஒரு இடத்திற்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. 

தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு வாக்களிப்பதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. ஒவ்வொரு எம்.எல்.ஏவும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும், மேலும் முகக்கவசம் அணிவது, சமூக விலகலை கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தமுள்ள 245 மாநிலங்களவை இடங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி 91 இடங்களிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி 61 இடங்களும் உள்ளன. இதைத்தொடர்ந்து, மற்ற எதிர்க்கட்சிகள் மற்றும் அணி கூட்டணியில்லாத கட்சிகளிடம் ஒருசேர 68 இடங்கள் உள்ளன. 
 

.