This Article is From Oct 01, 2018

தீவிரவாதம் மற்றும் மாவோயிசத்தை ஒழிக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் - ராஜ்நாத் சிங்

கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டை அச்சுறுத்தும் விஷயங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தீவிரவாதம் மற்றும் மாவோயிசத்தை ஒழிக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் - ராஜ்நாத் சிங்

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Kolkata:

நாட்டை அச்சுறுத்தும் பிரச்னைகள், தீவிரவாதம் மற்றும் மாவோயிசத்தை அடியோடு ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மேற்கு வங்காள முதல்வர் மம்தாபானர்ஜி, ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ், பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே உள்ளிட்டோரை சந்தித்து பேசி பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் கிழக்கு மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாடு கொல்கத்தாவில் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜ்நாத் சிங், மாவோயிசம், தீவிரவாதம் என நாட்டை அச்சுறுத்தும் எந்த பிரச்னையையும் அடியோடு ஒழிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் சக்தி மத்திய அரசுக்கு உண்டு என்று கூறினார்.

பல்வேறு மாநிலங்களில் மத்திய படைகளை திரும்பப் பெற்றுக் கொள்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், தேர்தல் போன்ற நேரங்களில் மத்திய படைகள் மீண்டும் அனுப்பி வைக்கப்படும் என்றார். தேவைப்பட்டால் கூடுதல் படைகளும் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

.