சச்சின் பைலட் VS அசோக் கெலாட் மோதல்: பெரும்பான்மைக்கு எத்தனை எம்எல்ஏக்கள் தேவை?

Rajasthan Crisis: காங்கிரஸ் அரசு தற்போது வரை பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை கொண்டுள்ளது.

சச்சின் பைலட் VS அசோக் கெலாட் மோதல்: பெரும்பான்மைக்கு எத்தனை எம்எல்ஏக்கள் தேவை?

சச்சின் பைலட் VS அசோக் கெலாட் மோதல்: பெரும்பான்மைக்கு எத்தனை எம்எல்ஏக்கள் தேவை? (File)

Jaipur/ New Delhi:

ராஜஸ்தான் துணை முதல்வர் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நேற்றைய தினம் போர்க்கொடி தூக்கிய நிலையில், இன்று அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் அசோக் கெலாட் 100 எம்எல்ஏக்களின் பலத்தை காட்டியுள்ளார். 

சுயோட்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் அரசு தற்போது வரை பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை கொண்டுள்ளது. எனினும், எதிர்கட்சியான பாஜக சச்சின் பைலட்டுடன் இணைந்து தலையிட முயற்சிக்கும் பட்சத்தில் மேலும் பல எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இருந்து விலகுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. 

சச்சின் பைலட் VS அசோக் கெலாட் மோதல், தேவையான பலம்;

  • ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மொத்தம் 200 உறுப்பினர்கள் உள்ளனர்.
  • பெரும்பான்மைக்கு 101 இடங்கள் தேவை.
  • காங்கிரஸ்: 107+ 10 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு பெற்றிருந்தது.
  • அசோக் கெலாட் வீட்டில் இன்று நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 97 பேர் பங்கேற்பு
  • சச்சின் பைலட் தன் வசம் 30 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதாக கூறியிருந்தார். 
  • சச்சின் பைலட் வசம் 16 எம்எல்ஏக்கள் இருக்க வாய்ப்புள்ளது. 
  • பாஜக வசம் 73 எம்எல்ஏக்கள் உள்ளனர்.