பைலட் அபிநந்தன் வர்தமனுக்கு ‘வீர் சக்ரா விருது’- சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது!

2019 Independence Day: அபிநந்தன் சென்ற மிக் 21 ரக போர் விமானத்தை, பாகிஸ்தானின் எப்.16 சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து அபிநந்தன் அந்நாட்டின் பிடியில் சிக்கினார். 

 Share
EMAIL
PRINT
COMMENTS
பைலட் அபிநந்தன் வர்தமனுக்கு ‘வீர் சக்ரா விருது’- சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது!

IAF Pilot Abhinandan Varthaman: சுமார் 60 மணி நேரம் பாகிஸ்தான் பிடியில் இருந்தார் அபிநந்தன்


New Delhi: 

கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் பிடியில் சிக்கி, சுமார் 60 மணி நேரம் அங்கேயே இருந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுக்கு (Abhinandan Varthaman) சுதந்திர தினத்தன்று வீர் சக்ரா விருது (Vir Chakra gallantry medal) வழங்கப்பட உள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அபிநந்தன் சென்ற மிக் 21 ரக போர் விமானத்தை, பாகிஸ்தானின் எப்.16 சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து அபிநந்தன் அந்நாட்டின் பிடியில் சிக்கினார். 

இந்திய - பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி, பாகிஸ்தான் நாட்டு எப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார் 36 வயதாகும் அபிநந்தன். அவரது விமானமும் விபத்துக்கு உள்ளான நிலையில், பாகிஸ்தான் பிடியில் சிக்கினார். தொடர்ந்து மார்ச் 1 ஆம் தேதி அவர் பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் தேசிய அளவில் மிகவும் புகழ் பெற்றார். 

ஜம்மூ காஷ்மீர் (Jammu Kashmir) மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேரை, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு தற்கொலைப் படைத் தாக்குதலால் கொன்றது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம், இந்திய விமானப் படை, பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் செயல்பட்டு வய்ந ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாமை குண்டு போட்டு அழித்தது. இதைத் தொடர்ந்துதான் இரு நாட்டுக்கும் இடையில் வான் வழிச் சண்டை நட்நதது. அதில்தான் அபிநந்தன் சிக்கினார். 

விமானம் விபத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து பாராசூட் மூலம் தப்பித்தார் அபிநந்தன். பாகிஸ்தானுக்கு உட்பட்ட இடத்தில் லேண்ட் ஆன அபிநந்தனுக்கு சிறிய காயங்கள் மட்டும் ஏற்பட்டது. அவர் பிடிபட்டதில் இருந்து தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 

அவர் இந்தியாவுக்கு வந்த பிறகு, தீவிர உடல் சோதனை செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அதற்குக் காரணம், பாகிஸ்தானின் உள்ளூர்காரர்கள் தாக்குதலில் ஈடுபட்டதே என்று அந்நாட்டு அரசு விளக்கம் கொடுத்தது. ஜெனீவா ஒப்பந்தத்தின் விதிமுறைகள்படியே அவர் கண்ணியமாக நடத்தப்பட்டார் என்றும் பாகிஸ்தான் விவரித்தது. 

விங் கமாண்டர் அபிநந்தனும் (IAF Pilot Abhinandan), “பாகிஸ்தான் தரப்பு என்னை உடல் ரீதியாக துன்புறத்தவில்லை. அதே நேரத்தில் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்” என்று தெரிவித்தார். 

கடந்த ஏப்ரல் மாதம், அபிநந்தன், இந்திய மேற்கு எல்லையில் இருக்கும் தளத்தில் பணியில் அமர்த்தப்பட்டார். அதுவும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................