This Article is From Dec 19, 2019

லாஸ் வேகாஸில் தொப்பி அணிந்த கவ்பாய் புறாக்கள்

வீடியோவில் தொப்பி அணிந்திருந்த புறாக்களை பிடித்து தொப்பியை நீக்க விலங்கு நல அமைப்பு லோஃப்டி ஹோப்ஸால் உதவியுள்ளது.

லாஸ் வேகாஸில் தொப்பி அணிந்த கவ்பாய் புறாக்கள்

தொப்பி அணிந்த புறாக்களின் புகைப்படங்களை கொண்டு கமெண்டுகளும் மீம்களும் வேகு வேகமாக பரவி வந்தன

லாஸ் வேகாஸில் ஒரு வாரத்திற்கு முன்பு கவ்பாய் தொப்பி அணிந்த புறாக்களின் வீடியோ ஆன்லைனில் வைரலாகி விட்டது. சிறிய தொப்பிகள் புறாக்களின் தலையில் ஒட்ட வைக்கப்பட்டிருந்தது. தொப்பி அணிந்த புறாக்களின் புகைப்படங்களை கொண்டு கமெண்டுகளும் மீம்களும் வேகு வேகமாக பரவி வந்தன. பல வேடிக்கையான கமெண்டுகளும் வந்தன. பலர் புறாக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கமெண்டுகள் செய்திருந்தனர்.

தொப்பிகள் ஒட்டப்பட்ட புறாவிற்கு க்ளக் நோரிஸ்(Cluck Norris) மற்றும் கூலமிட்டி ஜான் (Coolamity Jane) என்று  செல்லப்பெயர் கூட வைக்கப்படுள்ளது. வீடியோவில் தொப்பி அணிந்திருந்த புறாக்களை பிடித்து தொப்பியை நீக்க விலங்கு நல அமைப்பு லோஃப்டி ஹோப்ஸால்  உதவியுள்ளது. 

விலங்கு நல அமைப்பு அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளது. 

செவ்வாயன்று பில்லி தி பிட்ஜ் என்ற புனைப்பெயர் கொண்ட மூன்றாவது தொப்பி அணிந்த புறாவுக் காணப்பட்டதாக கூறப்பட்டது. விலங்கு நல அமைப்பு அதையும் பிடித்து தொப்பியை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

விலங்கு நல அமைப்பான லோஃப்டி ஹோப்ஸ் இணை நிறுவனர் ஹில்மேன் சி.என்.என் உடன் பேசியபோது தொப்பிகள் புறாக்களின் தலையில் ஒட்ட வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். விலங்கு நல மருத்துவர் புறாக்களின் தலையில் ஒட்ட வைக்கப்பட்ட தொப்பிகளை பாதுகாப்பாக நீக்கினார். 

புறாக்கள் இரண்டும் நலமாக இருக்கின்றன என்றும் தொப்பிகளை நீக்கியதில் மகிழ்ச்சியென்றும் கூறுகின்றனர். 

குழு கூலமிட்டு ஜான் என்ற புறாவைத் தேடி வருகிறது. 

Click for more trending news


.