This Article is From Jan 03, 2019

''வருங்கால ஆஸ்திரேலிய கேப்டன்'' கருத்துக்கு கம்மின்ஸின் பதில்!

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸை வருங்கால ஆஸ்திரேலிய கேப்டனாக வேண்டும் என்று வந்த கணிப்புகளுக்கு பதிலளித்துள்ளார் கம்மின்ஸ்

''வருங்கால ஆஸ்திரேலிய கேப்டன்'' கருத்துக்கு கம்மின்ஸின் பதில்!

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸை வருங்கால ஆஸ்திரேலிய கேப்டனாக வேண்டும் என்று வந்த கணிப்புகளுக்கு பதிலளித்துள்ளார் கம்மின்ஸ். இது பற்றிய கேள்விக்கு இது மிகவும் வேடிக்கையானது. டிம் பெய்ன் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அவர் நீண்ட காலம் இதனை தொடருவார் என்று கூறினார்.

நான் பந்துவீச்சில் முழு நேரமாக தீவிரமாக இயங்க விரும்புகிறேன். பேட்டிங்கிலும் முழு ஈடுபாட்டுடன் இருக்க விரும்புகிறேன். இதற்கான கடின உழைப்பின் போது என்னால் சிறப்பான கேப்டனாக செயல்பட முடியாது என்பது தான் தனது கருத்து என்றார்.

25 வயதான கம்மின்ஸ் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ளார்/ இந்திய அணியுடனான மெல்பெர்ன் டெஸ்ட்டில் இரண்டாவது இன் நிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பேட்டிங்கின் போது 114 பந்துகளில் 63 ரன்கள் குவித்து தனி ஒருவனாக போராடினார். இருப்பினும் ஆஸ்திரேலியா 137 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அது மட்டுமின்று 2-1 என்ற தொடரில் பின் தங்கியது.

ஆனால் கம்மின்ஸ் ஒரு வேகப்பந்துவீச்சாளர் கேப்டனாக வேண்டும் என்றார். ஹேசல்வுட் துணைக் கேப்டன் பதவிக்கு தகுதியானவர். அவர் களத்துக்குள் வந்தால் ஆட்டத்தை பற்றி யோசித்துக் கொண்டே இருப்பார் என்றார். ஆனால் எனக்கு புரியவில்லை ஏன் ஒரு பந்துவீச்சாளர் கேப்டனாக முடியவில்லை என தெரிவித்தார்.

கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சாளர் ஒருவர் கேப்டனாகி 55 வருடங்கள் ஆகிறது. 1958-63ல் ரிச்சி பெனாட் எனும் லெக் ஸ்பின்னர் கேப்டனாக இருந்தார்.

.