This Article is From Sep 30, 2018

இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் ஹெலிகாப்டர் – சுட்டு வீழ்த்த ராணுவம் முயற்சி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹெலிகாப்டரை கண்காணித்த இந்திய ராணுவத்தினர் அதனை சுட்டு வீழ்த்த முயற்சி மேற்கொண்டனர்.

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ஹெலிகாப்டர்

Srinagar:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதி அருகேயுள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியே எல்லைக் கோடு செல்கிறது. இங்கு இன்று மதியம் சுமார் 12.13-க்கு பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று அத்துமீறி உள்ளே நுழைந்தது. இதுபற்றி எச்சரிக்கை விடுத்தும், ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தும் நடவடிக்கையில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

ராணுவம் அளித்துள்ள தகவலின்படி எல்லைக்குள் புகுந்த ஹெலிகாப்டர் என்பது போர்க்களத்தில் பயன்படுத்தக்கூடிது அல்ல. அது சிவில் பயன்பாடுகளுக்கு உரிது. ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்தார்களா அல்லது வேண்டுமென்றே இந்த சம்பவம் நடத்தப்பட்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

கடந்த பிப்ரவரி மாதத்தின்போது 300 மீட்டருக்கு உள்ளே பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று வந்தது. ஆனால் தற்போது அதை விட மோசமானது அல்ல என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து என்.டி.டி.வி.க்கு மேஜர் ஜெனரல் அஷ்வனி சிவாஜ் அளித்த பேட்டியில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் ஹெலிகாப்டர் நுழைந்திருப்பது மிகவும் சிரியஸான விஷயம். எவ்வளவு தூரம் ஹெலிகாப்டர் ஊடுருவி வந்துள்ளது என்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. அதுதெரிந்தால் மட்டுமே உளவு வேலைக்கு இந்த சம்பவம் நடந்ததா என்பதை அறிந்து கொள்ள முடியும். சில சமயங்களில் தவறுதலாக எல்லைக்குள் நுழையவும் வாய்ப்பு இருக்கிறது என்றார்.

.