This Article is From Sep 02, 2019

சிதம்பரம் மீதான சிபிஐ காவல் 5-ம்தேதி வரை நீட்டிப்பு!! திகார் வேண்டாம் என கோரிக்கை வைத்தார்!

ஐ.என்.எக்ஸ். மீடியா விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 21-ம்தேதி முதல் அவர் சிபிஐ பிடியில் இருக்கிறார்.

சிதம்பரம் மீதான சிபிஐ காவல் 5-ம்தேதி வரை நீட்டிப்பு!! திகார் வேண்டாம் என கோரிக்கை வைத்தார்!

சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 11 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

New Delhi:

சிதம்பரம் மீதான சிபிஐ காவலை வரும் 5-ம்தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 74 வயதாகும் சிதம்பரம் தன்னை திகார் சிறையில் அடைக்க வேண்டாம் என்று நீதிமன்றத்தில் முறையிட்டார்.

சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், அவரை மத்திய சிறைக்குப்பதிலாக வீட்டுச் சிறையில் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் சிதம்பரத்தின் சிபிஐ காவலை 5-ம்தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.

கபில் சிபல் வாதிடுகையில், ‘சிதம்பரம் தனது 74 வது வயதில் இருக்கிறார். அவருக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. அவரை வீட்டுச் சிறையில் வைக்க வேண்டுமே தவிர திகாருக்கு அனுப்பக் கூடாது' என்று கூறினார்.

சிபிஐ பிடியில் இருக்கும் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தின் முதல் மாடியில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் கடும் பரபரப்புக்கு மத்தியில் டெல்லியில் இருக்கும் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் சிதம்பரம். அப்போதிலிருந்து அவர் சிபிஐ பிடியில்தான் விசாரணை செய்யப்பட்டு வருகிறார். 

.