This Article is From Oct 18, 2018

ஒடிசாவை சூறையாடிய டிட்லி புயல், வெள்ளத்தால் ரூ. 2,765 கோடி இழப்பு

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த சிறப்பு ஆணையர், சுமார் 2,765 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஒடிசாவை சூறையாடிய டிட்லி புயல், வெள்ளத்தால் ரூ. 2,765 கோடி இழப்பு

புயலில் 56,930 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bhubaneswar:

ஒடிசாவை சூறையாடிச் சென்ற டிட்லி புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் உண்டான பாதிப்புகள் குறித்து தற்போது மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சுமார் ரூ. 2,765 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 60.11 லட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை வெள்ள பாதிப்பை மதிப்பீடு செய்யும் சிறப்பு ஆணையர் பி.பி. சேதி தலைமையிலான குழு மேற்கொண்டது.

இதன்படி, 56 ஆயிரத்து 930 வீடுகள் முற்றிலும் அழிந்துள்ளன. சுமார் 34 ஆயிரத்து 951 கால்நடைகள் இயற்கையின் கோர தாண்டவத்திற்கு பலியாகியுள்ளன.

பாலச்சூர், பத்ராக், கட்டாக், தென்கனல், கஜபதி, கஞ்சம், ஜகத் சிங்பூர், ஜெஜ்பூர், கந்தமால், கேந்திரப்பாரா, கியோஞ்சர், குர்தா, மயூர்பஞ்ச், நயாகர், பூரி, அங்குல் மற்றும் ராயகடா ஆகிய 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள 128 பிளாக்குகளில், 8,125 கிராமங்களில் வசிக்கும் 60.11 லட்சம் மக்கள் வெள்ளம், புயலால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கஜபதி மாவட்டத்திற்கு சென்று அங்கு புயலால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

.