This Article is From Jan 25, 2019

‘அது சட்டவிரோதமானது!’- தரைமட்டமாகப் போகும் நிரவ் மோடியின் ரூ.100 கோடி பங்களா!

நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக சொல்லப்படும் நிரவ் மோடியைப் பிடிக்கும் முயற்சியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது

‘அது சட்டவிரோதமானது!’- தரைமட்டமாகப் போகும் நிரவ் மோடியின் ரூ.100 கோடி பங்களா!

அமலாக்கத் துறைதான், பங்களாவின் மதிப்பு 100 கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிட்டது. 

Raigad:

13,000 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் நிரவ் மோடிக்குச் சொந்தமாக 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களா இடிக்கப்பட உள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தின் அலிபாக் பகுதியில் இருக்கும் அந்த பங்களா சட்ட விரோதமானது என்று நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து, இந்த இடிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 33,000 சதுர அடிக்கு விரியும் அந்த பங்களாவில் பல்வேறு பிரபலமான பார்ட்டிகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் அலிபாக் உள்ள, ராய்கட் மாவட்ட ஆட்சியர் சூரியவன்ஷி, ‘கடற்ப்புறத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பங்களா கட்ட பின்பற்றப்படவில்லை. அது சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார். 

பாம்பே உயர் நீதிமன்றத்தில், ‘ராய்கட் கடற்கரையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள பங்களா, ரிசார்ட், உணவகங்கள் இடிக்கப்பட வேண்டும்' என்று கோரி 2009 ஆம் ஆண்டு தன்னாரவத் தொண்டு நிறுவனம் ஒன்று பொதுநல வழக்குத் தொடர்ந்தது. அதில்தான் மனுதாரருக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தது. நிரவ் மோடியின் பங்களா மட்டுமின்றி, அதற்குப் பக்கத்தில் உள்ள 58 கட்டடங்களும் இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக சொல்லப்படும் நிரவ் மோடியைப் பிடிக்கும் முயற்சியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது. பஞ்சாப் தேசிய வங்கியில் 13,000 கோடி ரூபாய்க்குப் பண மோசடி செய்ததாக மோடி மீது குற்றச்சாட்டு எழுந்த பின்னர், ராய்கட் பங்களாவை இடிக்கக் கூடாது என்று அமலாக்கத் துறை முதலில் ஆட்சேபனை தெரிவித்தது. ஆனால், சிறிது காலத்திற்குப் பிறகு அது குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கலாம் என்று கூறிவிட்டது. அமலாக்கத் துறைதான், பங்களாவின் மதிப்பு 100 கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிட்டது. 

பிஎன்பி பண மோசடி வழக்கில் மோடியின் மாமாவான மெஹுல் சோக்சியும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். அவருக்கும் அலிபாகில் ஒரு பங்களா இருப்பதாக தெரிகிறது. நிரவ் மோடியின் இருப்பிடம் குறித்து இதுநாள் வரை தெரியாத நிலையில், சோக்சி ஆன்டிகுவாவில் குடியுரிமை வாங்கி தங்கிவிட்டார். 

சமீபத்தில் அவர் இந்திய குடியுரிமையை விட்டுத் தந்து, தனது பாஸ்போர்டை ஒப்படைத்தார். ஆன்டிகுவாவிலிருந்து நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கவே, சோக்சி இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. இருவரையும் மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசு தரப்பு தொடர்ந்து முயன்று வருகிறது. 

.