This Article is From Jun 10, 2018

மும்பை நகரத்தில் பலத்த மழை எதிர்ப்பார்ப்பு : 10 முக்கிய புள்ளிகள்

உடனடி உதவிகளுக்கு குழுக்கள் தயாரான நிலையில் இருப்பதாக பிரிகான் மும்பை நகராட்சி (BMC) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஹைலைட்ஸ்

  • பருவமழை காற்று கடந்த சனிக்கிழமை அன்று கோவா பகுதிகளை தாக்கியது
  • மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
  • தென் கொன்கன் மற்றும் கோவா பகுதிகளில் பலத்த மழை பெய்யும்
Mumbai: பருவமழை காற்று மும்பை நகரத்தை தாக்கிய பின், இன்று தென் மகாராஷ்டிரம் மற்றும் மும்பை பகுதிகளில் பலத்த மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள பகுதியில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று கடந்து வருவதாக, வானிலை மையத்தில் எச்சரித்துள்ளனர். மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தை சேர்ந்த மூன்று நபர்கள் தீவிர மழை காரணமாக இறந்தனர். மின்னல் தாக்கி ஒரு மீனவரும், பலத்த மழையின் காரணமாக லாரியின் மீது மோதிய இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் ஒருவரும் இறந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது

மும்பை மழையின் தற்போதய நிலை

• மும்பையில் பலத்த மழையின் அறிவிப்பு காரணமாக, கடந்த சமிக்கிழமை அன்று 12 சர்வதேச விமானங்கள் உள்ளிட்ட 30 விமானங்கள் கால தாமதமாயின. மும்பையின் முக்கியமான புறநகர் இரயில் சேவையும் பாதிப்படைந்தது. 15 முதல் 20 நிமிடங்கள் தாமதமாக இரயில்கள் இயக்கப்பட்டன, என்று அதிகாரிகள் கூறினர்.

• குறித்த நாட்களுக்கு முன்னரே, மும்பையில் பருவ மழை தொடங்கியதால், பலத்த மழை தாக்கியது. இதனால், நகரத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது

• கடந்த சனிக்கிழமை அன்று, மத்திய மும்பை, பிரபாதேவியில் உள்ள வீர் சர்வாகர் மார்க் பகுதியில் கட்டிடம் இடிந்ததால், நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரி தெரிவித்தார்.

• மழைநீரில் தலைகீழாக இருக்கும் வாகனத்தின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட மும்பை காவல் துறையினர்,வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டி அறிவுறுத்தியுள்ளனர்.

• தீவிரமான வெள்ள அபாயம் இருக்குமாயின், உடனடி உதவிகளுக்கு குழுக்கள் தயாரான நிலையில் இருப்பதாக பிரிகான் மும்பை நகராட்சி (BMC) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3000க்கும் மேற்பட்ட நகர பணியாளர்கள், பணி அமர்த்தப்பட்டுள்ளதாக துணை நகராட்சி ஆணையர் கிஷோர் கிசிர்சாகர் தெரிவித்தார். BMCயின் அதிகாரிகளுக்கான வார விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது

• தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் கடற்படை பணியாளர்களை அவசர உதவிக்காக தயாரான நிலையில் வைக்கப்பட்டுள்ளது

• 2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட மும்பை மழையை காட்டிலும், இந்த ஆண்டு தீவிரமாக உள்ளது என வானிலை மையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

• மத்திய அரபிக்கடல், கொன்கன், மத்திய மகாராஷ்டிரம் மரத்தவாடா, விதர்பா, சட்டிஸ்கர், ஒடிசா, வங்காள விரிகுடாவின் வடமேற்கு பகுதிகளுக்கு பருவமழை கடந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

• மத்திய கிழக்கு, மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் கடலின் சீற்றம் அதிகமாவதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

• தென் கொன்கன் மற்றும் கோவா பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை காற்று கடந்த சனிக்கிழமை அன்று கோவா பகுதிகளை தாக்கியது.
.