மும்பையில் வெளுத்து வாங்கும் மழை! வெள்ளமான சாலைகள்!

இன்று இன்னும் சில மணி நேரங்களுக்கு இடி உடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

மும்பையில் வெளுத்து வாங்கும் மழை! வெள்ளமான சாலைகள்!

Waterlogging was reported in some parts of Mumbai and its suburbs.

ஹைலைட்ஸ்

  • பருவமழையின் துவக்கமாக இடி மின்னலுடன் மும்பையில் மழை
  • சாலை, விமானப் போக்குவரத்து பாதிப்பு
  • தண்ணீர் தேங்கி இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல்
Mumbai: கடந்த இரண்டு நாள்களில் மும்பையில் பெய்த மழைகளிலேயே நேற்று பெய்தது மிகவும் கடுமையானதாக இருந்தது. பருவ மழைக்கு தொடக்கப் புள்ளியாக இடி மின்னல் உடன் நேற்று மும்பை மாநகரை மழை கடுமையாகத் தாக்கியது.

இதனால் சாலைப் போக்குவரத்து மட்டும் இன்றி விமானப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மும்பை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. ராய்கட், தானே, ரத்னகிரி மற்றும் பால்கர் பகுதிகளிலும் கடுமையான மழைப் பொழிவு இருந்தது.

முக்கிய நகரச் சாலைகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் தண்ணீர் வெள்ளமாகத் தேங்கி இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சத்திரபதி சிவாஜி விமான நிலையத்துக்கு வரும் ஒன்பது விமானங்கள் ஒரே நேரத்தில் அருகில் உள்ள அகமதாபாத் விமான நிலையத்துக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விமானங்களின் வரத்தும் தாமதம் ஆயின. இதனால் மக்கள் கடும் சிக்கலுக்கு உள்ளாகினர்.

இதனால் நள்ளிரவு 11.30 மணி வரையிலும் தாமதம் ஆனது. புறநகர் ரயில் சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மக்கள் வெகுவாகப் பாதிப்பு அடைந்தனர். அபர்நாத், தானே போன்ற பகுதிகளில் இடி மின்னல் புயல் காற்று எனக் கடுமையான தாக்குதல்களால் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இன்று இன்னும் சில மணி நேரங்களுக்கு இடி உடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.