This Article is From Jul 10, 2018

நிற்காமல் பெய்யும் மும்பை மழை - ரயில் சேவை முடக்கம்

மும்பையில் பெய்து வரும் கன மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

Mumbai:

 

மும்பை: மும்பையில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பெரும்பாலான சாலைகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளுக்கு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. முக்கியமான பகுதிகளுக்கு செல்லும் இரயில்கள் 10 முதல் 15 நிமிடங்கள் தாமதாகவே இயக்கப்படுகின்றன என மேற்கு இரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக,மும்பையின் டப்பாவாலா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று, வழக்கத்தை விட ஐந்து மடங்கு அதிக மழை பெய்துள்ளது. மேலும், வரும் வியாழன் வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

  1. மும்பையில் பெய்து வரும் கன மழையால், இரயில் தண்டவாளங்களில் நீர் சூழ்ந்துள்ளது. வசை மற்றும் விஹார் பகுதிகளுக்கு இடையே இரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக மேற்கு இரயில்வே அறிவித்துள்ளது. மேலும், தெற்கு மும்பை சர்ச்கேட் ஸ்சேஷன் முதல் வசை வரையிலான இரயில் சேவை தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. எனினும், பலத்த மழையிலும்,  சர்ச்கேட் முதல் போரிவிலி வரை செல்ல கூடிய ரயில்கள் வழக்கம் போல இயங்குகின்றன.  

  2. மும்பை புறநகர் பகுதி நல்லஸ்போரா இரயில் தண்டவாள புகைப்படத்தை மேற்கு இரயில்வே துறை பகிர்ந்துள்ளது. ரயில் தண்டவாளங்களில் 460 மில்லிமீட்டருக்கு நீர் அதிகரித்துள்ளதால், இரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது

  3. முன்னெச்சரிக்கையாக, நேற்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மும்பை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

  4. “முழங்கால் அளவு தண்ணீர் சூழ்ந்துள்ளதால், உணவுகளை கொண்டு சென்று சேர்பதற்கு கடினமாக உள்ளது” என்று மும்பை டப்பாவாலா அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுபாஷ் டலேக்கர் தெரிவித்தார்.

  5. பெரும்பாலன பகுதிகளில், காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் தானே, ராய்காட், பால்கார் பகுதிகளில் மிக கன மழை பெய்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்தது.

  6. மும்பை விமான நிலையத்தில் வானிலை சீராக இல்லையென்றாலும், திங்கட்கிழமை முதல் வழக்கமான சேவை தொடங்கியுள்ளது. பயண தேதியை மாற்றும் மும்பை பயணிகளிடம் இருந்து இன்று அபராதம் பெறுவதில்லை என ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

  7. வசை மாநகரில், தண்ணீர் சூழ்ந்துள்ளதால் 300-க்கும் மேற்பட்ட மக்கள் மாட்டிக்கொண்டுள்ளனர்.

  8. கடந்த திங்கட்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை, கொலாபா பகுதியில் 104.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

  9. கடந்த 20 நாட்களில், வழக்கமா பருவ மழையில் 54% மழை மும்பைக்கு கிடைத்துள்ளது.  

  10. அதோடு, அடுத்த 24 மணி நேரங்களில், 150 - மில்லிமீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஸ்கைமெட், தனியார் வானிலை மையம் அறிவிதுள்ளது.

 

.