This Article is From Jan 08, 2019

தமிழக உயர்கல்வித்துறை செயலரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான விவகாரத்தில் தமிழக உயர்கல்வித் துறை செயலர் மங்கத்ராம் சர்மாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக உயர்கல்வித்துறை செயலரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மங்கத்ராமை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Chennai:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு எதிராக தனியார் கல்லூரிகள் சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் முடிவில் வெளி மாநில மாணவர்களை சேர்க்க மாட்டோம், வெளி மாநிலங்களில் கல்வி மையங்களை திறக்க மாட்டோம் ஆகிய உத்தரவாதங்கள் பல்கலைக் கழகம் தரப்பில் அளிக்கப்பட்டது.

இவை மீறப்பட்டதாக கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் உயர் கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மாவை தவிர்த்து மற்ற அதிகாரிகள் ஆஜர் ஆகினர்.

இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று நீதிபதிகள் கூறி, மங்கத்ராமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். இன்று மங்கத்ராம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.

 

மேலும் படிக்க : நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய உயர்கல்வி துறை செயலாளர்! - கைது வாரண்ட் வாபஸ்!

.