This Article is From Mar 15, 2019

4 மாதங்களாக நடைபெற்ற முதல் மக்களவை தேர்தல்!! - வியப்பூட்டும் தகவல்கள்

முதல் மக்களவை தேர்தல் நடைபெற்றபோது இந்தியாவில் மொத்தம் 489 தொகுதிகள் மட்டுமே இருந்தனர். வாக்களிக்க 17.3 கோடி பேர் தகுதியானவர்களாக அப்போது இருந்தார்கள்.

4 மாதங்களாக நடைபெற்ற முதல் மக்களவை தேர்தல்!! - வியப்பூட்டும் தகவல்கள்

முதல் மக்களவை தேர்தலில் மொத்தம் 1849 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

New Delhi:

நூறாண்டு கால போராட்டத்திற்கு பின்னர் இந்தியா 1947-ல் விடுதலை பெற்றது. ஏழை நாடு என்ற நிலையில் இருந்து தற்போது பொருளாதார சக்தி மிக்க நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறிப்போயுள்ளது. 

மக்களாட்சிக்கு இந்தியா அளித்து வரும் முக்கியத்துவம்தான் அதன் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம். 1950 ஜனவரி 26-ம்தேதி குடியரசாக இந்தியா மாறிய பின்னர் தனது முதல் மக்களவை தேர்தலை 1951-ல் இந்தியா எதிர் கொண்டது.

முதல் மக்களவை தேர்தல் 1951 அக்டோபர் 25-ம்தேதி தொடங்கி 1952 பிப்ரவரி 21-ம் தேதி வரைக்கும் சுமார் 4 மாதங்கள் நடந்திருக்கிறது. அன்றைய தேதியில் நாட்டில் மொத்தம் 489 மக்களவை தொகுதிகள் இருந்திருக்கின்றன. 
 

dup925qg

முதல் மக்களவை தேர்தலில் மொத்தம் 17.3 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தார்கள். 489 தொகுதிகளில் மொத்தம் 1849 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் 45.7-ஆக மட்டுமே பதிவானது. 
 

odecikds

முதல் மக்களவை தேர்தலை பொறுத்தவரையில் பெண்கள் அதிகளவு வேட்பாளர்களாக நின்றனர். இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அக்கட்சிக்கு மொத்தம் 45 சதவீத வாக்குகள் கிடைத்தன. மொத்தம் இருந்த 489 தொகுதிகளில் 364 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. 

நாட்டின் முதல் பிரதமராக ஜவகர்லால் நேரு பொறுப்பேற்றுக் கொண்டார். வரும் ஏப்ரல் 11-ம்தேதி இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 82 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்களாக இருக்கின்றனர். 

.