தமிழகத்தில் 13 பூத்களில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு!!

5 மக்களவை தொகுதிகளில் 13 பூத்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தமிழகத்தில் 13 பூத்களில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு!!

மே 19-ம் தேதி 13 பூத்களில் மறு வாக்குப்பதிவு


தமிழகத்தில் 46 பூத்களில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியிருந்த நிலையில் 13 பூத்களில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்த 13 பூத்களும் தர்மபுரி, திருவள்ளூர், கடலூர், ஈரோடு, தேனி ஆகிய 5 மக்களவை தொகுதிகளில் வருகின்றன. இவற்றில் தர்மபுரியில் 8 பூத்களும், கடலூர், திருவள்ளூர், ஈரோட்டில் தலா ஒரு பூத்களும், தேனியில் 2 பூத்களும் வருகின்றன. 

தமிழகத்தில் 46 பூத்களில் மறு வாக்குப்பதிவு நடத்த வாய்ப்பிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

இதுதொடர்பான உத்தரவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு பிறப்பித்துள்ள தேர்தல்  ஆணையம், 13 பூத்களில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................