This Article is From Dec 03, 2018

‘நான் வீரன், பிச்சைக்காரன் இல்லை!’- தெலங்கானா முதல்வர் பாஜக, காங்., மீது காட்டம்

தெலங்கானாவில் இன்னும் ஒரு சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், அம்மாநில முதல்வரான சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் மற்றும் பாஜக-வை காட்டமாக விமர்சித்துள்ளார்

ஹைலைட்ஸ்

  • 2019-ல் காங், பாஜக-வுடன் சேரமாட்டேன், கேசிஆர்
  • 3வது அணி அமைப்பதில் முனைப்பாக உள்ளேன், கேசிஆர்
  • சந்திரபாபு நாயுடுவையும் விமர்சித்துள்ளார் கேசிஆர்
Hyderabad:

தெலங்கானாவில் இன்னும் ஒரு சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், அம்மாநில முதல்வரான சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் மற்றும் பாஜக-வை காட்டமாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் மற்றும் பாஜக குறித்து ராவ் பேசுகையில், ‘அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத மூன்றாவது அணியை உருவாக்குவதில் முனைப்பாக இருக்கிறேன். இந்தியாவுக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. அந்த மாற்றம் ஐதராபாத்திலிருந்து ஆரம்பமாகும்.

நான் இதைச் செய்வது பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. நாட்டின் நலனிற்காக இந்த மாற்றத்தைச் செய்தேயாக வேண்டும் என்று நினைக்கிறேன். நான் ஒரு வீரன். பிச்சைக்காரன் இல்லை. மூன்றாவது அணி, மத்தியில் ஆட்சி அமைக்க என்னால் ஆன அனைத்து வித நடவடிக்கையையும் மேற்கொள்வேன்' என்று கூறியுள்ளார்.
 

v6isrktc

பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் மிகவும் மோசமானது எது என்று கேட்டதற்கு ராவ், ‘இரண்டும் மோசமான கட்சிகள்தான். மத்தியில் அதிகாரத்தைக் குவிப்பது தான் இரு கட்சிகளின் நோக்கமும். அவர்கள் மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யவேயில்லை. நான் ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாக இருக்கிறேன். இரு கட்சிகளுடனும் நான் கூட்டணி வைக்கப் போவதில்லை. நான் மக்களோடுதான் கூட்டணி வைக்கப் போகிறேன்' என்று பதிலளித்தார். 

சந்திரசேகர் ராவ் 2014 ஆம் ஆண்டு, ‘தெலங்கானா என்ற மாநிலம் உருவானதில், சோனியா காந்தியின் பங்கை எடுத்து விட முடியாது' என்று சொன்னார். ஆனால் அவரின் மகன் கே.டி.ராமா ராவ், ‘சோனியா காந்தி, தெலங்கானா உருவாவதற்கு சம்மதம் தெரிவித்தது, அரசியல் அழுத்தத்தினால்' என்று கருத்து தெரிவித்துள்ளார். 

ராவ் முடிவாக, ‘எங்கள் கட்சி, இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்' என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். 

.