காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்பும் - இந்தியா ஐ.நா கூட்டத்தில் உறுதி

நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். எந்தவொரு நாடும் அதன் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று அவர் கூறினார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

பிராந்தியத்தில் உள்ள கட்டுபாடுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வருகின்றன.


United Nations: 

ஜம்மு- காஷ்மீரில் மிகப்பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் குறித்த பாகிஸ்தான் குற்றச்சாட்டுகளை இந்தியா செவ்வாயன்று நிராகரித்தது. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை தொடர்ந்து இப்பகுதியில் நிலைமை பதட்டமாகவே காணப்பட்டு வருகிறது. 

“சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும் ஜம்மு-காஷ்மீரின் சிவில் நிர்வாகம் அடிப்படை சேவைகள், அத்தியாவசிய பொருட்கள், நிறுவனங்களின் இயல்பான செயல்பாடு, போக்குவரத்து ஆகிய அடிப்படை வசதிகளை உறுதி செய்துள்ளது. ஜனநாயக செயல்முறைகள் தொடங்கப்பட்டுள்ளன.” என்று இந்திய தூதர் விஜய் தாக்கூர் சிங் ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் தெரிவித்தார். மனித உரிமைகள் கவுன்சிலி பிராந்தியத்தில் உள்ள கட்டுபாடுகள் தொடர்ந்து தளர்த்தப்படுவதற்கான பல்வேறு வழிகளை பட்டியலிடுகிறது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் பொருட்டு அங்குள்ள குடிமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய ஜம்மு-காஷ்மீர் குறித்த அரசாங்கத்தின் முடிவிற்குப் பின்னர் “தற்காலிக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்” தேவை என்று எம்.எஸ்.சிங்க் கூறினார்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை அகற்றி அதை இரண்டு மாவட்ட யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான முடிவு பரவலாக விவாதிக்கப்பட்ட பின்னரே  எடுக்கப்பட்டது என்று எம்.எஸ்.சிங் மேலும் சுட்டிக்காட்டினார். “பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்ற சட்டங்களைப் போலவே இந்த முடிவும் இறையாண்மைக்கு உட்பட்டா எடுக்கப்பட்டது. நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். எந்தவொரு நாடும் அதன் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று அவர் கூறினார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................