This Article is From Dec 07, 2018

‘வைகோவுக்கு நிலப்பிரபுத்துவ உளவியல்..!’ - மதிமுக, விசிக இடையில் விரிசலா..?

திமுக-வின் தோழமைக் கட்சிகளாக இருக்கும் மதிமுக-வுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

‘வைகோவுக்கு நிலப்பிரபுத்துவ உளவியல்..!’ - மதிமுக, விசிக இடையில் விரிசலா..?

திமுக-வின் தோழமைக் கட்சிகளாக இருக்கும் மதிமுக-வுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

சில நாட்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம், ‘திராவிட இயக்கங்கள் பட்டியலின மக்களுக்கு என்ன செய்தது?' என்று கேட்டதற்கு, ‘எனது வீட்டில் பணிபுரிபவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்தான்' என்றார்.

வைகோவின் இந்தக் கருத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, ‘வைகோவின் பதிலை ஆதிக்க, நிலப்பிரபுத்துவ உளவியலாக பார்க்கிறோம்' என்று கருத்து தெரிவித்துவிட்டார்.

வன்னி அரசின் இந்தக் கருத்துக்கு பொங்கியெழுந்த மதிமுக, ‘வைகோ நிலப்பிரபுத்துவ உளவியல் கொண்டவரா என்பதை, வன்னி அரசு நெஞ்சில் கை வைத்துச் சொல்ல வேண்டும்' என்று அறிக்கை வெளியிட்டது.

இதனால் இரு கட்சிகளுக்கும் இடையில் கொள்கை ரீதியிலான மோதல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் வன்னி அரசு, ‘மரியாதைக்குரிய அண்ணன் வைகோ மீது விசிக நன்மதிப்பு கொண்டுள்ளது. அவர் தலித்துகளுக்கு எதிராக நடந்து கொண்டார் என்று எப்போதும் குற்றம் சுமத்த மாட்டோம்.

ஆனால், அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூறிய கருத்துக்குக் தான், நான் பதில் கருத்து கூறினேன். அது கோட்பாடு அடிப்படையிலான எதிர் கருத்து.

இது வைகோவுக்கு மட்டும் வைக்கப்பட்ட கேள்வியல்ல. பொதுச் சமூகத்துக்கே வைக்கப்பட்ட கேள்வி. இதைத் தனி நபர் தாக்குதலாக பார்க்க வேண்டிய அவசியமில்லை' என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

.