This Article is From Nov 05, 2018

சீனாவையே தாக்கும் வலிமை கொண்ட நீர்மூழ்கி ரோந்து கப்பலின் சோதனை வெற்றி

ஐ.என்.எஸ். அரிஹந்த் ரோந்து கப்பல் வெற்றிகரமாக கண்காணிப்பு பணியை முடித்ததற்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலை உருவாக்கியவர்களுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார் பிரதமர் மோடி

New Delhi:

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை தாக்கும் ஏவுகணைகள் ஐ.என்.எஸ். அரிஹந்த் எனப்படும் நீர்மூழ்கி ரோந்துக் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கப்பல் வெற்றிகரமாக தனது ரோந்துப் பணியை நிறைவு செய்துள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ ஐ.என்.எஸ். அரிஹந்த்தை உருவாக்கிய நிபுணர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் இந்திய வரலாற்றில் முக்கியமான ஒரு பகுதி” என்று குறிப்பிட்டுள்ளார்.

6000 டன் (60 லட்சம் கிலோ) எடை கொண்ட ஐ.என்.எஸ். அரிஹந்த் கடந்த 30 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு வந்தது. பிரதமர் மோடியின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் அணுசக்தி பயன்பாட்டுத் துறையால் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ரோந்துப் பணியை வெற்றிகரமாக முடித்திருப்பதன் மூலம், முழு சக்தி மிக்க பாதுகாப்பு ஆயுதமாக அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் உருவெடுத்துள்ளது. இதனை பாராட்டும் வகையில் பிரதமர் மோடி, “ நவீன யுகத்தில் நம்பத்தகுந்த பலமான ஆயுதங்கள் நமக்கு தேவையாக உள்ளன. அரிஹந்த் நீர் மூழ்கி கப்பலின் வெற்றிகரமான சோதனை மூலம், நம்மை ப்ளாக் மெயில் செய்வோருக்கு தகுந்த பதிலடி கொடுக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலமாக இந்திய பெருங்கடலில் இருக்கும் எந்தவொரு இலக்கையும் துல்லியமாக தாக்க முடியும். சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளின் எல்லைக்கும் சென்று தாக்குதல் நடத்தும் வலிமை இந்த ஏவுகணைக்கு உண்டு.

முன்னதாக தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் சோதனையை, ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர் மூழ்கி கப்பல் வெற்றிகரமாக சோதித்தது. இந்த வலிமை கொண்ட கப்பல்கள் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் மட்டுமே உள்ளது. இதே வகையை சேர்ந்த ரோந்து கப்பல்களை சீனா கடந்த 2015-ல் இருந்துதான் உருவாக்கி வருகிறது. அந்த சோதனை இன்னும் முடிவு அடையவில்லை.

இதேபோன்று, பாகிஸ்தானும் பாபர் என்ற நீர்மூழ்கி கப்பலை உருவாக்கி வருகிறது. இந்திய கடற்படையின் சோதனை வெற்றிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமம் மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

.