This Article is From Sep 15, 2018

முதன் முறையாக சிறிய ரக ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ

மாறி வரும் நவீன உலகில் லித்தியம் – அயான் பேட்டரிகள் தொழில்நுட்பத்திற்கு மிகவும் உதவிகரமாக உள்ளன.

முதன் முறையாக சிறிய ரக ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சிறிய ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேட்டி

Chennai:

தொடர்ந்து பல சாதனைகளை ஏற்படுத்தி வரும் இஸ்ரோ, தற்போது மேலும் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. முதன் முறையாக சிறிய ரக ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் இந்த ராக்கெட் விண்ணுக்கு அனுப்பப்படும் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், 500-700 கிலோ எடை கொண்ட பொருட்களை இந்த ராக்கெட் தாங்கிச் செல்லும். ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்துதான் இந்த ராக்கெட் ஏவப்படும் என்றார்.

லித்தியம் – அயான் பேட்டரிகளை வாங்குவதில் இஸ்ரோ முனைப்பு காட்டி வருகிறது. இது தொடர்பாக 130 தொழில் நிறுவனங்கள் தங்களது அறிக்கையை இஸ்ரோவில் அளித்துள்ளன. இதுதொடர்பாக பதிலளித்த சிவன், லித்தியம் அயான் பேட்டரிகள் வாங்குவது தொடர்பாக இன்னும் ஒரு மாதத்தில் இறுதி செய்யப்படும் என்றார்.

மாறி வரும் நவீன உலகில் லித்தியம் – அயான் பேட்டரிகள் தொழில்நுட்பத்திற்கு மிகவும் உதவிகரமாக உள்ளன. குறிப்பாக மொபைல் ஃபோன், கேமரா மற்றும் கேட்ஜெட்டுகளில் இந்த பேட்டரிகள்தான் பயன்படுத்தப்படுகிறது. அதனை தங்களது கருவிகளிலும் பயன்படுத்த இஸ்ரோ முடிவு செய்திருக்கிறது.

இந்தியாவில் செயல்படும் ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்கு தனது தொழில் நுட்பத்தை ரூ. 1 கோடி மதிப்பில் அளிக்கவுள்ளதாக கடந்த ஜூனில் இஸ்ரோ அறிவித்திருந்தது. இதனை கேரளாவில் உள்ள விக்ரம் சாராபாய் நிறுவனம் வழங்கும்.

.