This Article is From Dec 26, 2018

பாக்ஸிங் டே டெஸ்ட்: புஜாரா, கோலி, அகர்வால் அபாரம் இந்தியா சிறப்பான துவக்கம்!

இந்திய ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று மெல்பெர்னில் துவங்கியது

பாக்ஸிங் டே டெஸ்ட்: புஜாரா, கோலி, அகர்வால் அபாரம் இந்தியா சிறப்பான துவக்கம்!

இந்திய ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று மெல்பெர்னில் துவங்கியது. எப்போதும் ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 26ம் தேதி துவங்கும் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படும். இந்த போட்டியில் டாஸில் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த தொடர் முழுவதும் ஃபார்மில் இல்லாத ராகுல், விஜய் நீக்கப்பட்டு மயன்க் அகர்வால் , விஹாரி துவக்க வீரர்களாக களமிறக்கப்பட்டனர். அதேபோல் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியை பொறுத்தமட்டில் ஹேண்ட்ஸ்கோம்புக்கு பதிலாக மிட்சல் மார்ஷ் சேர்க்கப்பட்டார்.

இந்திய வீரர்கள் ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர் . ஹனுமா விஹாரி 66 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு மயன்க் - விஹாரி இணை 44 ரன்கள் குவித்தது. உணவு இடைவேளையின் போது இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 57 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

உணவு இடைவேளைக்கு பின் புஜாரா, பயன்க் அகர்வால் இருவரும் பொறுப்புடன் ஆடி வருகின்றனர். 44 ஓவர்கள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் துவக்க வீரர் மயன்க் அகர்வால் அறிமுக போட்டியிலேயே அரைசதமடித்து அசத்தினார். புஜாரா 31 ரன்களுடனும், மயன்க அகர்வால் 54 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

அணி விவரம்

இந்தியா:

விஹாரி, மயன்க் அகர்வால், புஜாரா,கோலி (கேப்டன்), ரஹனே, ரோஹித் ஷர்மா, ரிஷப் பன்ட், ஜடேஜா, ஷமி, இஷாந்த ஷர்மா, பும்ராஹ்.

ஆஸ்திரேலியா:

பின்ச், மார்க்ஸ், கவாஜா, ஷான் மார்ஷ், மிட்சல் மார்ஷ், ட்ராவிஸ் ஹெட், டிம் பெய்ன்(கேப்டன்), கம்மின்ஸ், ஸ்டாஅர்க், லயன், ஹேசல்வுட்.

தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் குவித்துள்ளது. தேநீர் இடைவேளைக்கு முந்தைய பந்தில் இந்திய அணியின் துவக்க வீரர் மயன்க அகர்வால் 76 ரன்கள் குவித்து கம்மின்ஸ் பந்தில் கீப்பர் பெய்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா 33 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆஸி தரப்பில் கம்மின்ஸ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது. தேநீர் இடைவேளைக்கு முந்தைய பந்தில் மயன்க் அகர்வால் விக்கெட்டை இழந்தது. அதன்பின் கடைசி பகுதியில் விக்கெட்டை கொடுக்காமல், புஜாரா மற்றும் கோலி சிறப்பாக ஆடினர். புஜாரா 68 ரன்களுடனும், கோலி 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் நாளில் இந்தியாவின் கையே ஓங்கியிருந்தது. ஆஸி வீரர்கள் விக்கெட்டை வீழ்த்த தடுமாறினர்.

.