This Article is From Aug 16, 2020

2021 தேர்தலில் பாஜக கைகாட்டும் கட்சியே ஆட்சி அமைக்கும்: எல்.முருகன்

தமிழக அரசியலில் இருவேறு சித்தாந்தங்கள் தொடர்ந்து மோதி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

2021 தேர்தலில் பாஜக கைகாட்டும் கட்சியே ஆட்சி அமைக்கும்: எல்.முருகன்

நாடு முழுவதும் கொரோனா நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் தற்போது தமிழகத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னதாக திமுக ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க செல்வம் பாஜக தலைவர்களை டெல்லிக்கு சென்று சந்தித்தது. மற்றும் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் சந்தித்தது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ கு.க செல்வம் திமுகவிலிருந்து நீக்கப்படுவதாக திமுக அறிவித்திருந்தது.

இந்த சலசலப்பு ஓய்வதற்குள், பாஜக நிர்வாகிகளுடன் இன்று காணொலியில் கலந்துரையாடிய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், “ தமிழக அரசியலில் அடுத்த 6 மாதங்களில் பெரும் மாற்றம் நிகழப்போகிறது.  2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கைகாட்டும் கட்சியே ஆட்சி அமைக்கும்.” எனக்கூறியுள்ளார். மேலும், “இந்த தேர்தலில் பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் மாவட்டத் தலைவருக்கு கார் பரிசாக வழங்கப்படும்” என்றும் தெரிவித்திருப்பது தமிழக அரசியல் சூழலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியலில் இருவேறு சித்தாந்தங்கள் தொடர்ந்து மோதி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

.