This Article is From Dec 09, 2018

மேகதாது அணை குறித்து சோனியாவுடன் ஆலோசிப்பேன்: மு.க.ஸ்டாலின்

மேகதாது அணை விவகாரம் குறித்து சோனியா காந்தியுடன் ஆலோசிப்பேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை குறித்து சோனியாவுடன் ஆலோசிப்பேன்: மு.க.ஸ்டாலின்

ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியாவிற்கு இன்று பிறந்தநாள் என்பதால், நேரில் சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து கூறுகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வியூகம் அமைப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்தக் கூட்டத்திலும் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

இதற்காக இன்று காலை டெல்லி புறப்பட்ட அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு சோனியா காந்திக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் அழைப்பு விடுக்க உள்ளேன்.

இந்த சந்திப்பின்போது, மேகதாது அணை விவகாரம் குறித்து சோனியா காந்தியோடு ஆலோசனை நடத்தப்படும் என்றார். மேலும், டெல்லியில் நாளை எதிர்கட்சிகள் நடத்தும் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளதாக கூறினார். இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் பங்கேற்றால், மேகதாது விவகாரம் தொடர்பாக அவரிடமும் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.


 

.