This Article is From Apr 04, 2020

Mask-களுக்கு ஏற்பட்ட டிமாண்டு… ‘எங்க டெலிவரியை அமெரிக்கா திருடிடுச்சு’- ஜெர்மனி பகீர் புகார்!

இதைப் போலவே பிரான்ஸ் அரசும், அமெரிக்காவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 

Mask-களுக்கு ஏற்பட்ட டிமாண்டு… ‘எங்க டெலிவரியை அமெரிக்கா திருடிடுச்சு’- ஜெர்மனி பகீர் புகார்!

அதிகாரி ஜெய்சல், “இது ஒரு திருட்டு நடவடிக்கையாகத்தான் பார்க்கிறோம். அமெரிக்கா, சர்வதேச விதிமுறைகளை மதித்து நடந்து கொள்ள வேண்டும்,” என்று கடுமையாக சாடியுள்ளார். 

ஹைலைட்ஸ்

  • அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு
  • அமெரிக்காவல் நேற்று ஒரே நாளில் 1,480 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்
  • உலகளவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது
Berlin, Germany:

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தற்காப்புக்காக அணியப்படும் முக மாஸ்க்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவிலிருந்து பாங்காக் விமான நிலையம் வந்து, அங்கிருந்து ஜெர்மனிக்கு செல்ல இருந்த மாஸ்க் டெலிவரியை அமெரிக்கா, கைப்பற்றி சென்றுவிட்டதாக பகீர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பெர்லின் நகர அரசு அதிகாரி, இது குறித்த அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார். 

பெர்லின் உள்துறை அமைச்சர் ஆண்ட்ரே ஜெய்சல், இந்த விவகாரம் பற்றி, “சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனத்திடம் 2,00,000 FFP2 மாஸ்க்குகளை நாங்கள் ஆர்டர் செய்திருந்தோம். பெர்லின் போலீஸுக்காக இந்த மாஸ்க்களை ஆர்டர் செய்தோம். ஆனால், அந்த டெலிவரியை பாங்காக் விமான நிலையத்தில் வைத்து அமெரிக்கா பறித்துச் சென்றுவிட்டது.

அமெரிக்க அரசு, மாஸ்க்களை ஏற்றுமதி செய்யத் தடை விதித்துள்ளது. அதனால்தான், இப்படி செய்யப்பட்டது என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சமீபத்தில்தான் அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் மருத்துவ உபகரணங்கள் சொந்த நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராட கொடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். 

இந்த விவகாரம் குறித்து ஜெர்மனியைச் சேந்த் செய்தித்தாள் பில்டு, சீனாவில் அமெரிக்காவின் 3M நிறுவனம் உள்ளது. அங்கிருந்து ஜெர்மனிக்கு உற்பத்தி செய்து அனுப்பிவைக்கப்பட்ட மாஸ்க்கள், தற்போது அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. 

3M நிறுவனத்துக்கு எதிராக டிரம்ப் ட்விட்டரிலும் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். “3M நிறுவனம், அவர்கள் தயாரிக்கும் தற்காப்பு முகமூடிகளை என்ன செய்கிறார்கள் என்பதை இன்று அறிந்து, அவர்களை கடுமையாக சாடியுள்ளேன்,” என்று கூறியுள்ளார் டிரம்ப். 

அதே நேரத்தில் இந்த விவகாரம் குறித்து ஜெர்மனியின் சுகாதாரத் துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பானுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவர், “இதைப் போன்ற தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இது நல்லதிற்கல்ல,“ என்று எச்சரித்துள்ளார். 

ஆனால் அதிகாரி ஜெய்சல், “இது ஒரு திருட்டு நடவடிக்கையாகத்தான் பார்க்கிறோம். அமெரிக்கா, சர்வதேச விதிமுறைகளை மதித்து நடந்து கொள்ள வேண்டும்,” என்று கடுமையாக சாடியுள்ளார். 

இதைப் போலவே பிரான்ஸ் அரசும், அமெரிக்காவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 

ஆனால் இந்த மொத்த விவகாரமும் தவறானது என்று ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் திட்டவட்டமாக கூறுகிறார் அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி ஒருவர். 


 

.