This Article is From Mar 15, 2019

டெல்லியில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் கவுதம் கம்பீர்..!?

டெல்லியில் மே 12 ஆம் தேதி, லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.

டெல்லியில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் கவுதம் கம்பீர்..!?

தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படும். 

New Delhi:

முன்னாள் இந்திய கிரிகெட் வீரர் கவுதம் கம்பீர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது. டெல்லி நகரவாசியான கம்பீருக்கு, அங்கு போட்டியிட்டால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால் இந்த ஏற்பாடு எனப்படுகிறது.

டெல்லியில் மொத்தமாக 7 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இந்த முறை அதில் ஒரு தொகுதியில் கம்பீர், பாஜக சார்பில் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டாலும், அது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை. சமீபத்தில்தான் கம்பீருக்கு, பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

2104 ஆம் ஆண்டு பஞ்சாபின் அம்ரிஸ்டரில் போட்டியிட்ட தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு, கம்பீர் பிரசாரம் செய்தார். அப்படி இருந்தும் தற்போது பஞ்சாப் மாநில முதல்வராக இருக்கும் கேப்டன் அம்ரிந்தர் சிங்கிடம், 2014 தேர்தலில் தோற்றார் ஜெட்லி. 

கடந்த டிசம்பர் மாதம், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் கம்பீர். இந்நிலையில், அவர் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து கூறி வந்தார். இதையடுத்து, அவர் சீக்கிரமே அரசியல் இன்னிங்ஸைத் தொடங்குவார் எனப்படுகிறது. 

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, அவர் ட்விட்டரில் அது குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். குறிப்பாக தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு, தான் பொறுப்பு என்றும் கூறினார். மேலும், அவர் டெல்லியில் ஆட்சி புரிந்து வரும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராகவும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். 

டெல்லியில் இந்த முறை காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையில் மும்முனைப் போட்டி நடைபெறும். 2014 தேர்தலில் மொத்தம் இருக்கும் 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. ஆனால், அடுத்த நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 70 தொகுதிகளில் 3-ல் மட்டுமே பாஜக வென்றது. இதனால், அங்கு பாஜக-வின் புகழ் சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

டெல்லியில் மே 12 ஆம் தேதி, லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படும். 


 

.