This Article is From Sep 03, 2018

இந்து தலைவர்களை கொல்ல சதித் திட்டம்..!?- 5 பேர் கைது!

இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த தலைவர்களை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு 5 பேர் கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்து தலைவர்களை கொல்ல சதித் திட்டம்..!?- 5 பேர் கைது!
Coimbatore, Tamil Nadu:

இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த தலைவர்களை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு 5 பேர் கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட 5 பேரும் கோயம்புத்தூருக்கு, பரோலில் வெளிவந்திருந்த குற்றவாளி ஒருவர் திருமணத்தில் பங்கெடுப்பதற்காக வந்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, உளவுத் துறை மற்றும் காவல் துறைக்கு கிடைத்த தகவலின்படி 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது குறித்துப் போலீஸ், 'கைது செய்யப்பட்டவர்கள் இந்து மக்கள் கட்சித் தலைவர்களை கொல்லத் திட்டம் தீட்டியுள்ளதாக சந்தேகப்படுகிறோம். அதன் மூலம் சமூக அமைதியை குலைக்க திட்டமிட்டிருந்தனர்' என்றுத் தெரிவித்தனர்.

.