This Article is From Aug 17, 2020

டெல்லியில் பேஸ்புக் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்! காவல்துறையில் புகார்!!

சர்ச்சைகளுக்கு இடையில், பேஸ்புக் வெறுக்கத்தக்க பேச்சு குறித்த கொள்கைகளை "யாருடைய அரசியல் நிலைப்பாட்டையோ அல்லது கட்சி இணைப்பையோ பொருட்படுத்தாமல்" செயல்படுத்துவதாகக் கூறியுள்ளது.

டெல்லியில் பேஸ்புக் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்! காவல்துறையில் புகார்!!

பாதிப்புக்கு உள்ளான அங்கி தாஸ் ஞாயிற்றுக்கிழமை போலீஸ் புகார் அளித்தார்.

ஹைலைட்ஸ்

  • The executive linked alleged threats to an article published last week
  • She filed a police complaint on Sunday
  • "Extremely disturbed by relentless harassment," she told police
New Delhi:

சமூக ஊடகமான பேஸ்புக்கில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் கருத்துகள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக வெளிவந்த அமெரிக்க நாளிதழின் கட்டுரை அரசியல் தளத்தில் பெரும் சலசலப்பினை ஏற்ப்படுத்தியதைத் தொடர்ந்து, தற்போது பேஸ்புக் உயர் அதிகாரி ஒருவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக  குற்றம் சாட்டியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

49 வயதான அங்கி தாஸ் ஆன்லைனில் பெறப்பட்டதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்களை கடந்த வாரம் வெளியிட்ட ஒரு கட்டுரையான வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் இணைத்துள்ளார்.

இந்தியாவில் பேஸ்புக்கின் உயர் பொது கொள்கை நிர்வாகியாக இருக்கும் அங்கி தாஸ் அவர் புகாரளித்துள்ள அனைவரையும் கைது செய்யுமாறு கோரியுள்ளார். மேலும், அவர் காவல்துறையின் பாதுகாப்பையும் கோரியுள்ளார்.

“நான் ஒரு பெண்ணாக இருப்பதால், தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறேன். குற்றவாளிகள் வேண்டுமென்றே ஆன்லைன் கணக்குகள் மூலம் தங்கள் அடையாளத்தை மறைக்கவும், தவறான தகவல்களை பரப்பவும், அவர்களின் நிகழ்ச்சி நிரலை பூர்த்தி செய்ய எனக்கு எதிராக வன்முறையைத் தூண்டவும் செய்கிறார்கள்.” என அங்கி தாஸ் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

“பேஸ்புக் வெறுப்பு-பேச்சு விதிகள் இந்திய அரசியலுடன் மோதுகின்றன - சர்ச்சைக்குரிய அரசியல்வாதியை தடை செய்வதற்கான நடவடிக்கையை நிறுவனத்தின் நிர்வாகி எதிர்த்தார்.” என்கிற தலைப்பில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், கட்டுரையை வெளியிட்டிருந்தது. இதில் பாஜக தலைவர்கள் மற்றும் ஊழியர்களிடமிருந்து வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் ஆட்சேபகரமான உள்ளடக்கம் போன்றவற்றில் பேஸ்புக் கண்டுக்கொள்ள மறுக்கின்றது என்று அக்கட்டுரை தெரிவித்துள்ளது.

பாஜக ஊழியர்களின் மீறல்களை தண்டிப்பது "நாட்டில் நிறுவனத்தின் வணிக வாய்ப்புகளை சேதப்படுத்தும்" என்று பேஸ்புக் நிர்வாகி கூறியதாகவும் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்களை மேற்கோள் காட்டி, பேஸ்புக் பாஜகவுக்கு "பரந்த ஆதரவை" கொண்டுள்ளது என்று கட்டுரை கூறியுள்ளது.

சர்ச்சைகளுக்கு இடையில், பேஸ்புக் வெறுக்கத்தக்க பேச்சு குறித்த கொள்கைகளை "யாருடைய அரசியல் நிலைப்பாட்டையோ அல்லது கட்சி இணைப்பையோ பொருட்படுத்தாமல்" செயல்படுத்துவதாகக் கூறியுள்ளது.

“ஆகஸ்ட் 14, 2020 மாலை முதல், நான் என் உயிருக்கு மற்றும் உடலுக்கு வன்முறை அச்சுறுத்தல்களைப் பெற்று வருகிறேன், குற்றம் சாட்டப்பட்ட நபர்களால் எனக்கு ஏற்பட்ட இடைவிடாத துன்புறுத்தல்களால் நான் மிகவும் கலக்கமடைகிறேன். எனது வாழ்க்கை மற்றும் உடலுக்கு, என்னுடைய மற்றும் என் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கும் நான் அஞ்சுகிறேன்.” என்று அங்கி தாஸ் கொடுத்த புகாரில் கூறியுள்ளார்.

“ஆன்லைனில் பெயர்-அழைப்பு, கொடுமைப்படுத்துதல் மற்றும் ஈவ்-டிசீங் ஆகியவற்றிற்கு நான் ஆளாக்கப்பட்டுள்ளேன். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களின் அரசியல் தொடர்புகள் காரணமாக வேண்டுமென்றே என்னை இழிவுபடுத்தியுள்ளனர், இப்போது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், தன்னை குற்றவியல் மிரட்டலுக்கு உட்படுத்தி, இணைய வழி பாலியல் ரீதியான தாக்குதல் தொடுப்பதாகவும்” அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் அவர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பிரிவு 354 ஏ (பாலியல் வண்ண கருத்துக்களை வெளியிடுவது), பிரிவு 499/500 (நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் சொற்களை வெளியிடுவதன் மூலம் அவதூறு), பிரிவு 506 (இறப்பு அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்தும் குற்றவியல் மிரட்டல்), பிரிவு 507 (அநாமதேய தகவல்தொடர்பு மூலம் குற்றவியல் மிரட்டல்) மற்றும் பிரிவு 509 (சொல், சைகை அல்லது ஒரு பெண்ணின் அடக்கத்தை அவமதிக்கும் நோக்கம் கொண்ட செயல்). ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்று புகார் கோரியுள்ளார்.

.