This Article is From Aug 29, 2019

“திமுக (DMK) தலைவராக ஓராண்டு; சோதனைகள்… சாதனைகள்…”- மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) பதில் என்ன..?

“கடந்த ஓராண்டில் நீங்கள் சந்தித்த சோதனைகள், சாதனைகள் என்னென்ன..?”

“திமுக (DMK) தலைவராக ஓராண்டு; சோதனைகள்… சாதனைகள்…”- மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) பதில் என்ன..?

இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில், நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்

மு.க.ஸ்டாலின், கடந்த ஓர் ஆண்டுக்கு முன்னர் திமுக-வின் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில், நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேச ஆரம்பித்த ஸ்டாலின், “திமுக சார்பில், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுடன் இன்று கட்சியின் உயர்மட்டக் குழு ஆலோசனை நடத்தியது. அவர்கள் செய்துள்ள பணிகள், செய்ய வேண்டிய கடமைகள் குறித்தெல்லாம் விவாதித்தோம். குறிப்பாக வாக்களித்த மக்களின் குறைகளை சீறிய முறையில் கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். வாக்களித்து உறுப்பினராக்கிய மக்களிடம் உரிய நன்றியைத் தெரிவித்திடுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளேன்” என்று பேசியவர், 

தொடர்ந்து, திமுக தலைவராக ஓராண்டு பயணம் செய்தது குறித்து பேசினார், “கடந்த ஓராண்டாக, நான் திமுக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு பத்திரிகைகள் என்னை பாராட்டி எழுதியுள்ளன. சிலர் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்கள். சிலர் நான் இன்னும் ஆக்கபூர்வமாக எப்படி செயல்படுவது என்பது குறித்து யோசனைகள் வழங்கியுள்ளனர். இப்படி சிறப்பாக செயல்பட்ட பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் மிக்க நன்றி” என்றார். 

ஒரு நிருபர், “கடந்த ஓராண்டில் நீங்கள் சந்தித்த சோதனைகள், சாதனைகள் என்னென்ன..?” என்றார். அதற்கு ஒரு கணம் யோசித்துவிட்டு, “சோதனைகளையும் சாதனைகளையும் எண்ணிப் பார்த்துக் கொண்டிருப்பவன் நான் கிடையாது. கலைஞரின் வழிகாட்டுதல்படி தொடர்ந்து சிறப்பாக செயல்படுவேன்” என்றார் தீர்க்கமாக.


 

.