பொங்கல் வரை இதே நிலைமையா..?- கடும் குளிர் குறித்து வெதர்மேன் அப்டேட்

தமிழக அளவில், மிகவும் குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரி, ஓசூரில் 8 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது

3 Shares
EMAIL
PRINT
COMMENTS
பொங்கல் வரை இதே நிலைமையா..?- கடும் குளிர் குறித்து வெதர்மேன் அப்டேட்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவுகிறது. மாலை 4 மணிக்கே ஆரம்பிக்கும் குளிர், அடுத்த நாள் பகல் வரை தொடர்கிறது. இந்நிலையில் பிரபல வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான், இந்த கடுங்குளிர் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது பதிவில் வெதர்மேன், ‘கடும் பனியால் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வெப்பநிலை மிகக் குறைவாக உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு தமிழகத்தில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இயல்பைவிட மிகவும் அதிகமாக குளிரும் இந்தப் போக்கு பொங்கல் வரை தொடரும். சென்னை, பூந்தமல்லியில் வெப்பநிலை 16.2 டிகிரி செல்ஷியஸாக இன்று காலை இருந்துள்ளது.

தமிழக அளவில், மிகவும் குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரி, ஓசூரில் 8 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................