கடலூர் அருகே வன்முறை: இருதரப்பினர் மோதலில் வீடு, வாகனங்களுக்கு தீ வைப்பு!

மார்ச் மாத இறுதியில் இருந்து கொரோனா வைரஸ் பூட்டுதலுக்கு மத்தியில் இது மாநிலத்தின் முதல் பெரிய வன்முறையாக கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

கடலூர் அருகே வன்முறை: இருதரப்பினர் மோதலில் வீடு, வாகனங்களுக்கு தீ வைப்பு!

மீன் பிடி படகுகள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு!

Chennai:

முன்னாள் உள்ளாட்சி மன்றத் தலைவரின் சகோதரரை கொலை செய்ததாகக் கூறி கடலூர் மாவட்டத்தில் வன்முறை மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவம் காரணமாக 43 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூரையடுத்த தலங்குடா கிராமத்தில் இந்த வன்முறை அரங்கேறியுள்ளன. இந்த சம்பவத்தில் மீன்பிடி படகுகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கொழுந்துவிட்டு எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் சில வீடுகளும் தீக்கு இரையாக்கப்பட்டன. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் தப்பித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வன்முறை சம்பவத்திற்கு பின்னர் இப்பகுதியில் சுமார் 200 காவல்துறையினர் பாதுகாப்புப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

“படகுகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்தன. இரு குழுக்களுக்கிடையேயான முந்தைய பகைதான் அடிப்படைக் காரணம் என்று தோன்றுகிறது. நாங்கள் போதுமான காவல் படையை நிலைநிறுத்தியுள்ளோம், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.” என கடலூர் எஸ்பி எம் ஸ்ரீ அபினவ் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாத இறுதியில் இருந்து கொரோனா வைரஸ் பூட்டுதலுக்கு மத்தியில் இது மாநிலத்தின் முதல் பெரிய வன்முறையாக கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.