This Article is From Mar 28, 2020

உலகளாவிய நிதி நெருக்கடி 2009 ஐ விட மோசமானதாக இருக்கும்: ஐ.எம்.எப் தலைவர் கருத்து

தற்போதைய உலகளாவிய நிதி நெருக்கடியானது கடந்த 2009-ல் ஏற்பட்ட நெருக்கடி நிலையை விட மோசமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய நிதி நெருக்கடி 2009 ஐ விட மோசமானதாக இருக்கும்: ஐ.எம்.எப் தலைவர் கருத்து

80க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடம் அவசர உதவி கோரியுள்ளன.

Washington:

கொரோனா தொற்றானது சீனா, இத்தாலி மட்டுமல்லாது சர்வதேச அளவில் பல நாடுகளில் பாதிப்பை உருவாக்கியுள்ளது. தற்போது பல நாடுகள் முடக்க நடவடிக்கையைக் கையாண்டிருக்கின்றன. இந்த நிலையில் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு சேர்த்து சர்வதேச பொருளாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் வாஷிங்டனை தளமாகக் கொண்டு கடன் வழங்கும் குழுவுடன் ஏற்பட்ட சந்திப்பைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

உலகளாவிய நிதி நெருக்கடி 2009 ஐ விட மோசமானதாக இருக்கும்:

நேற்று இணையம் வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா  “தற்போதைய உலகளாவிய நிதி நெருக்கடியானது கடந்த 2009-ல் ஏற்பட்ட நெருக்கடி நிலையை விட மோசமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். கொரோன வைரஸ் தாக்கமானது உலக பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்திருக்கின்றது. இந்த நிலையில் தற்போது வளரும் நாடுகள் இந்த வீழ்ச்சியிலிருந்து வெளியேற அதிக அளவு நிதியை நாட வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக” குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், “கடந்த சில வாரங்களில் சந்தைகளில் 83 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளன. அதில் பெரும்பகுதியை ஈடுகட்ட வேண்டுமெனில் உள்நாட்டு வளங்கள் நாடுகளுக்கு போதுமானதாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது அவ்வாறாக ஏதும் இல்லை. ஏற்கெனவே பல நாடுகள் கடன் சுமையில் தத்தளித்துக்கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த வருவாயைக் கொண்ட 80க்கும் அதிகமான நாடுகள் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியைக் கோரியிருக்கின்றன. உதவி கோரியுள்ள நாடுகளின் சொந்த இருப்புகள் மற்றும் உள்நாட்டு வளங்கள் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவர்களுக்குப் பெரிய அளவில் உதவாது.” என்று ஜார்ஜீவா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமீபத்தில் அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்த 2.2 டிரில்லியன் டாலர் பொருளாதார தொகுப்பையும் அவர் வரவேற்றுள்ளார். “உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை மெருகூட்டுவதற்கு இந்த நிதி தொகுப்பு முற்றிலும் அவசியம்” என்று கூறியுள்ளார்.

.