நாடு முழுவதும் ஒரே நாளில் 69,921 பேருக்கு கொரோனா! 40 லட்சத்தினை நெருங்கும் மொத்த பாதிப்பு!!

மகாராஷ்டிரா மாநிலம் 7,92,541 நோயாளிகளுடன் தேசிய அளவில் முதல் இடத்தில் உள்ளது. 

நாடு முழுவதும் ஒரே நாளில் 69,921 பேருக்கு கொரோனா! 40 லட்சத்தினை நெருங்கும் மொத்த பாதிப்பு!!
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 40 லட்சத்தினை நெருங்குகின்றது. கடந்த 24 மணி நேரத்தில், 69,921 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். 819 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பானது 36,91,167 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 7,85,996 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 28,39,883 பேர் குணமடைந்துள்ளனர். அதே போல 65,288 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் 7,92,541 நோயாளிகளுடன் தேசிய அளவில் முதல் இடத்தில் உள்ளது. 

Newsbeep

உலகம் முழுவதும் 2.54 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,83,203 பேர் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.