தமிழகத்தில் கொரோனா! மாவட்டவாரியாக முழு விவரம்!!

இதுவரை 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 170 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களில் 2,564 பேரும் 60 வயது கடந்தவர்களில் 289 பேரும்  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா! மாவட்டவாரியாக முழு விவரம்!!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,000ஐ கடந்துள்ளது. இன்று புதியதாக 266 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 203 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,023 ஆக அதிகரித்துள்ளது. அதே போல இதுவரை 30 பேர் தமிழகம் முழுவதும் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (03-05-2020):

அரியலூர் - 28

செங்கல்பட்டு - 93

சென்னை - 1,458

கோவை - 146

கடலூர் - 39

தர்மபுரி - 1

திண்டுக்கல் - 81

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 15

காஞ்சிபுரம் - 41

கன்னியாகுமரி - 17

கரூர் - 43

கிருஷ்ணகிரி - 0

மதுரை - 90

நாகை - 45

நாமக்கல் - 61

நீலகிரி - 9

பெரம்பலூர் - 11

புதுக்கோட்டை - 1

ராமநாதபுரம் - 20

ராணிப்பேட்டை - 40

சேலம் - 33

சிவகங்கை - 12

தென்காசி - 40

தஞ்சை - 57

தேனி - 44

நெல்லை - 63

திருப்பத்தூர் - 18

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 70

திருவண்ணாமலை - 16

திருவாரூர் - 29

திருச்சி - 51

தூத்துக்குடி - 27

வேலூர் - 22

விழுப்புரம் - 86

விருதுநகர் – 32

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் பச்சை மண்டலமாக கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே உள்ளது. ஆரஞ்சு மண்டலமாக 24 மாவட்டங்களும், சிவப்பு மண்டலங்களாக 12 மாவட்டங்களும் உள்ளன.

இதுவரை 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 170 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களில் 2,564 பேரும் 60 வயது கடந்தவர்களில் 289 பேரும்  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

12 வயதிற்கு உட்பட்ட 170 குழந்தைகளில் 82 பேர் பெண் குழந்தைகளும், 88 ஆண் குழந்தைகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.

அதேபோல 13 முதல் 60 வயதிற்கு உட்பட்ட 2,564 பேரில் 1,732 ஆண்கள், 831 பெண்கள், ஒரு மாற்று பாலினத்தவர் என கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டுள்ளனர்.

60 வயது கடந்த 289 பேரில் 195 பெண்களும், 94 ஆண்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (03-05-2020):

அரியலூர் - 6

செங்கல்பட்டு - 48

சென்னை - 250

கோவை - 133

கடலூர் - 26

திண்டுக்கல் - 72

ஈரோடு - 69

கள்ளக்குறிச்சி - 3

காஞ்சிபுரம் - 9

கன்னியாகுமரி - 10

கரூர் - 42

மதுரை - 43

நாகை - 42

நாமக்கல் - 50

நீலகிரி - 9

பெரம்பலூர் - 3

ராமநாதபுரம் - 11

ராணிப்பேட்டை - 34

சேலம் - 24

சிவகங்கை - 11

தென்காசி - 11

தஞ்சை - 41

தேனி - 42

நெல்லை - 56

திருப்பத்தூர் - 17

திருப்பூர் - 108

திருவள்ளூர் - 45

திருவண்ணாமலை - 10

திருவாரூர் - 19

திருச்சி - 47

தூத்துக்குடி - 26

வேலூர் - 16

விழுப்புரம் - 27

விருதுநகர் - 19